உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

_

இளங்குமரனார் தமிழ்வளம் – 1

உரு ஒளி; மால் = உயரம். இலக்கிய வழக்கும் பொது வழக்கும் இணைந்து நடையிடும் சொற்களுள் ஈதொன்று. இதனைப் பொதுவழக்கெனல் தகும்.

உருமிப்பு

உருமம் என்பது காற்று விசிறுதல் இல்லாமல் இறுக்கமாக வியர்வை உண்டாகும் நிலையைக் குறிப்பதாம். உருமம் ருமிப்பு. ஒருமிப்பு என்றும் கூறுவர். உருமநிலை உண்டாயின் மழை பெய்யும் என்பர். உரும் = இடி. இதனைக் கருதலாம். இது தென்னகப் பொது வழக்கு.

உருவாரம்

பொ(ய்)ம்மை

மண்ணால் செய்வதுண்டு அவர்கள் மண்ணீட்டாளர், குயவர், வேளார் (வேள் = மண்) என வழங்கப் படுவர். ‘குலாலர்' என்பது பின்வழக்கு. வெண்ணிக் குயத்தியார் புகழ் வாய்ந்த பெண்பாற் புலவர். குயவர்கள் தாம் உருவாக்கும் பொம்மையை ‘உருவாரம்’ என்பது தொழில் வழிவழக்கு ஆகும். ஆரம், வாரம் வளைதல் பொருள். வனைதல் என்பதும் வளைதல் பொருளதே. கலங்களும் பொம்மைகளும் வளைவமைப்பு உடையனவையே.

உருவால் அரிசி

வெந்தயம் என்பது மசாலைக்கும், மருந்துக்கும் பயன்படும் கடைச் சரக்குப் பொருள். அதன் வடிவமைப்புக் கருதித் தக்கலை வட்டாரத்தார் அதனை உருவால் அரிசி என்பர். ‘உரு அழகாகும். வால் மிளகு, வால்பேரி - என்பவற்றை எண்ணலாம். உருளை

ரு'

ஆடு மாடு முதலியவை விலைமாறும் தரகர் வழக்கில் உருளை என்பது ‘பணம்' என்னும் பொருளில் வழங்கப்படு கிறது. சில இடங்களில் இதனை வட்டம், என்றும் சக்கரம் என்றும் வழங்குதல் உண்டு. காசு, பணம் என்பவற்றின் வடிவு கருதி வழங்கும் வழக்கம் ஈதாம்.

உருளோசு

குமரி மாவட்ட மூக்குப் பேரி (பீரி) வட்டாரத்தார் கடிகாரத்தை உருளோசு என வழங்குவர். கடிகார வடிவும், முள்கள் சுழலும் வடிவும், சக்கரங்களின் வடிவும் உருளை யாதலால் இவ்வழக்கு ஏற்பட்டது.