உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளித்தல்:

வட்டார வழக்குச் சொல் அகராதி

263

கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். “அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை" என்பது பழிப்புச் சொல். கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல். கிளி சொல்லியதைத் திரும்பச் சொல்லுதல் போல் பல்கால் சொன்ன வசையைச் சொல்லல். கிளத்தல் = பேசுதல். கிளித்தல், வைதல். இது நெல்லை, முகவை வழக்கு.

கிளையல்:

6

கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்கு கின்றது. கிண்டுதல் கிளறுதல் என்பவை தோண்டாமல் பரவ இழுத்தல். பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண் வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும்.

கீரி:

கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர். 'கீர் கீர்' என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது கீர்வாணம் எனப்பட்ட து. சங்கு அறுக்கும் அறுவை ‘கீர்’ எனப்படுவதால், கீரு கீரு என அறுத்தல் என வழங்கப்பட்டது. இது பொது வழக்குச் சொல்.

WP:

விறகைக் கீறுதல் - பிளத்தல் - பொதுவழக்கு. கீறல் என விரல் வரி வைப்பதும் பொது வழக்கு. கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும். கீறுதல் - கிண்டுதல் கிளறுதல் செய்யும் கோழியைக் கீறி என்பது அரிய வட்டார வழக்காகும். பொது வழக்காகக் கொள்ளத் தக்கதும் ஆகும்.

குக்கு:

-

உட்கார் என்பதைக் 'குந்து' என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது நெல்லை முகவை வழக்கு. குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும்.

குச்சரி:

கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக் கிராமம் குக்கல் முடங்கிக் கிடக்கும் நாய்க்கும், கோழிக்கு வரும்