உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இளங்குமரனார் தமிழ்வளம்

1

கெடும்பு:

குறுநொய் அரிசி என்னும் பொருளில் கெடும்பு என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. கெட்டுப்போன கரிய அரிசியைக் குறித்து, பின்னர்

பெயராகியிருக்கும்.

கெத்து:

நொறுங்குக்குப்

பொதுப்

கத்துதல் பொது வழக்குச் சொல். ஒலிக்குறிப்புடை யது. கோழி முட்டையிடக் கத்துதல் கெத்துதல் எனப்படும். கேறுதல் என்பதும் உண்டு. “முட்டைக்குக் கெத்துகிறது” என்றும், ‘முட்டைக்குக் கேறுகிறது” என்றும் கூறுவர். து முகவை, நெல்லை வழக்கு. அடைக் கத்துக் கத்துதல் என்பது தென்னக வழக்காம். கேறு ஒலிக்குறிப்பு.

66

கெத்தை:

தலையணையாக வைக்கும் திண்டு மெத்தையைக் கெத்தை என்பது செட்டிநாட்டு வழக்கு. கெத்துவிடாமல் பேசுதல் என்பது விட்டுத் தராமல், பெருமைகுறையாமல் பேசுவது அல்லது ஒட்டியும் ஒட்டாமலும் பேசுவது. அதுபோல் ஒட்டியும் ஒட்டாமல் மெத்தைமேல் கிடக்கும் சிறுமெத்தை கெத்தை என வழக்குப் பெற்றிருக்கலாம்.

கேதம்:

ஏதம் என்பது இடை டையூறு, யூறு, இறப்பு என்னும் பொருள் தருவது இலக்கிய வழக்கு. ஏதம் என்பது ககர ஒற்றுப் பெற்று கேதம் என்றாகி இறப்பைக் குறிப்பது பொது வழக்காக உள்ளது. பொது வழக்கு என்பது மாவட்டம் வட்டம் தழுவிநில்லாமல் ம் தமிழ்வழங்கு பரப்பெல்லாம் தழுவி நிற்பதாகும்.

கேறுதல்:

கத்துதல்,

கோழி முட்ட இடுவதற்குக் கேறுதல் எனப்படும். இதுவும், பொது வழக்கே ஆகும். கூவுதல், கத்துதல் என்பது விலக்கிய ஒலி, கேறுதல் ஆகும்.

கை:

கை என்பது ஐந்து என்னும் பொருளில் தரகுத் தொழில் வழக்காக உள்ளது. ஐந்து விரல் கருதியது அது. பூட்டு என்பதும் இலை விற்பாரிடம் ஐந்து என்னும் பொருளில் வழங்குகின்றது.