உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

நெறிமுகம்:

இளங்குமரனார் தமிழ்வளம் 1

நெறி=வழி. இவண் நீர்வழி. கடலில் கப்பல் படகு ஆயவை வந்து செல்லும் துறை, முகம் எனப்படும். துறைமுகம் என்பது அது. ஆறு கடலோடு கலக்கும் இடம் நெறிமுகம் எனப்படுதல் புதுக்கடை வழக்காகும்.

நேரி:

தெய்வத்திற்கு முன்னாக நின்று ‘உண்மை' சொல்வதை நேரி என்பது குமரி மாவட்ட வழக்கு. நேரில் நின்று கூறுவ துடன் நேரிய நெஞ்சத்துடன் கூறுவதுமாம். நேரி என்பதற்கு மக்களாட்சி முறையில் செலுத்தப்படும் வாக்குரிமையை நேரி என்பார் பாவாணர்.

நைப்பு:

நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால், மடித்துப் போகும் என்பர். மடித்துப் போதல் உதவாமல் கெட்டுப் போதல்.

நொச்சு:

நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார ஈர வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல். நொடிப்பு என்பது வறுமை, பள்ளம் என்னும் பொருளுடையது.

நொட்டை:

“எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகி விட்டது” என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது.

நொடி:

நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச் சொல். நொடித்தல் பதில் கூறுதலாகும். நொடி என்பது பள்ளம் என்னும் பொருளில் தென்னக வட்டார வழக்காகும். வண்டியை நொடியில் விட்டுவிடாதே; நொடிப் பள்ளம்