80
திருக்குறள்
தமிழ் மரபுரை
இறந்துபட்ட பின், அவற்றின் விரிவுந் திரிபுமான வடநூன் முறையைத் தென்னாட்டிற் குரியதாகக் கூறியிருப்பது பெருந்தவறாம்.
768. அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்.
(இ-ரை.) தானை - படை; அடல்தகையும் ஆற்றலும் இல் - எனினும் பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; படைத்தகையால் பாடு பெறும் - தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும்.
'இல்லெனினும்' என்னும் இழிவுசிறப்பும்மை அவற்றின் இன்றியமை யாமையைக் காட்டிற்று. தோற்றப் பொலிவாவது, சுவடிக்கப்பட்ட தேர்களும் படாம்போர்த்த யானைகளும் அணிபூட்டிய குதிரைகளும், குடை கொடி பதாகை முதலிய கண்கவர் எடுபிடிகளும், பல்லியமும் காளவகைகளும் செ-யும் ஓசை முழக்கமும், கூடிய ஆரவாரம். படைவகுப்பு, மேற்கூறப்பட்டது; 'பாடு' பார்த்தவுடன் பகைவர் அஞ்சும் பெருமை. தென்னாலி இராமனின் 'எட்சண் டெருமை கட்டும் கயிறு' (திலகா ட மகிஷபந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல், வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மருட்டலாம் என்றார். பதாகை - பெருங்கொடி.
769. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.
(இ-ரை.) சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வரவரச் சிறுத்தலும் மனத்தை விட்டு நீங்காத வெறுப்பும் ஏழைமையும் தனக்கில்லாவிடின்; படை வெல்லும் - படை பகைவரை வெல்லும்.
சிறுத்தல் படை மறவர் விலகுவதால் நேர்வது. இச் சிறுமையும் வறுமையும் அரசன் பொருள் கொடாமையால் வருவன. 'செல்லாத் துனி' பெண்டிரை அரசன் கைப்பற்றுவதாலும் பிற இழிசெயல்கள் செ-வதாலும் ஏற்படுவது. இம் மூன்றும் உள்ளவிடத்து அரசன்மீது அன்புகொண்டு ஊக்கமா-ப் பொராராதலால், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.
770. நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.