உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82

திருக்குறள்

தமிழ் மரபுரை


ஒரு மறவன் தன் திறத்தை மிகுத்துக் கூறுவது நெடுமொழி யெனப்படும். இதை வெட்சித்திணைக் கரந்தைப் பகுதித் துறையாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்' என்பர் தொல்காப்பியர் (தொல். பொருள். புறத், 5). ஐயனாரிதனார் இதை 'நெடுமொழி கூறல்' என்று கரந்தைப் படலத் துள்ளும், 'நெடுமொழி வஞ்சி' என்று வஞ்சிப் படலத்துள்ளும் அமைப்பார். இவற்றுள் முன்னது தன் அரசனை நோக்கியது; பின்னது தன் பகைவரை நோக்கியது. 'மாராயம் பெற்ற நெடுமொழி' என்னும் தொல்காப்பிய வஞ்சித் துறை சிறிது வேறுபட்டது.

இக் குறள், ஒரு மறவன் தன் தலைவனை உயர்த்துக் கூறும் கூற்றா யிருப்பதால், நெடுமொழியாகாது அதன் வகையே யாகும். 104ஆம் புறப் பாட்டுப்போல் அரச வாகையாயின் படைச் செருக்காகாது.

772. கான முயலெ- த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

(இ-ரை.) கான முயல் எ-த அம்பினில் - காட்டிலோடும் முயலின் மேல் தப்பாது எ-த அம்பை ஏந்துவதிலும்; யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது - திறந்தவெளியில் நின்ற யானைமே லெறிந்து தப்பிய வேலைப் பிடித்திருத்தல் பெருமை தருவதாம்.

இது, பகைவருள் ஒரு காலாட்படை மறவனைக் கொல்வதினும், ஓர் அரசனை அல்லது படைத்தலைவனை வெல்ல முயலும் முயற்சி சிறந்த தென்று கருதும் மறவன் கூற்று. மரஞ்செடிகொடி யடர்ந்த 'கானம்' என்றதனால் திறந்தவெளி யென்பதும், 'பிழைத்த' என்றதனால் தப்பாது என்பதும், சிறு விலங்கிற்கேற்ப 'எ-த' என்றதனால் பெருவிலங்கிற்கேற்ப எறிதல் என்பதும், மறுதலைச் சொற்களாக வருவிக்கப்பட்டன.

773. பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றக்கா
லூராண்மை மற்றத னெஃகு.

(இ-ரை.) தறுகண் பேராண்மை என்ப - அஞ்சாதும் இரக்கமின்றியும் பகைவரொடு பொரும் கடுமறத்தைச் சிறந்த ஆண்டன்மை என்று சொல்வர்; ஒன்று உற்றக்கால் ஊராண்மை அதன் எஃகு ( என்ப) - ஆயினும், அப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தவிடத்து இரங்கி அதை நீங்குதற்பொருட்டு அவர்க்கு உதவி செ-தலை, அவ் வாண்டன்மைக்குக் கூர்மையென்று சொல்வர் மறநூலார்.