உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

திருக்குறள்

தமிழ் மரபுரை





என்பதில் ‘இல்' கொடிவழியையும், 'குடி' சரவடியையும், 'பிறப்பு' குடும்பத் தையும், 'சிறப்பு அரசாளற்குரிமையையும் குறிக்கும். செப்பமாவது கருத்து சொல் செயலாகிய முக்கரணமும் தம்முள் முரணாத செம்மை. நாணென்பது பழி பளகம் (பாவம்) பற்றிய அச்சமும் அருவருப்பும் கொண்ட வெட்கம். இவை நல்ல குடிப்பிறந்தார்க்கு இயற்கையாக அமையும்; பிறர்க்கு எத்துணைக் கற்பிப்பினும் அமையா.

952. ஒழுக்கமும் வா-மையு நாணுமிம் மூன்று

மிழுக்கார் குடிப்பிறந் தார்.

(இ-ரை.) குடிப்பிறந்தார். நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கமும் வா-மையும் நாணும் இம் மூன்றும் இழுக்கார்

பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.

ஒழுக்கம் மெ-ம்மை

ஒழுக்கம் முதலிய மூன்றும், முறையே, மெ - மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

953.

நகையீகை யின்சொ லிகழாமை நான்கும் வகையென்ப வா-மைக் குடிக்கு.

-

-ரை.) வா-மைக் குடிக்கு – எக்காலத்துந் திரிபில்லாது ஒரே சரியா- ஒழுகும் உயர்குடிப் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் – இரவலரும் இரப்போரும் வறிய வுறவினரும் தம்மை யடைந்தபோது, முகம் மலர்தலும் இயன்றன கொடுத்தலும் இன்சொற் சொல்லுதலும் தாழ்வாகக் கருதாமையும் ஆகிய நான்கு குணமும்; வகை என்ப - இயல்பாக வுரிய கூறென்பர் அறிந்தோர்.

எக்காலத்தும் தவறாது ஒழுகுதலும் வழங்குதலும்பற்றி வைகையைப் "பொ-யாக் குலக்குடி" (சிலப். 13: 170) என்றதுபோல, நற்குடியை 'வா-மைக் குடி' என்றும், இல்லாரை இல்லாளும் ஈன்றாளும் உட்பட எல்லாரும் எள்ளுவாராகலின், இகழாமையைக் குடிப்பிறந்தார்க்குச் சிறப்பாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். இரவலராவார் புலவர் பாணர் கூத்தர் முதலியோர். "நான்கின் வகையென்பது பாடமாயின், வா-மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந் நான்கான் உளதாமென் றுரைக்க” என்று பரிமே லழகர் கூறியிருப்பது பொருத்தமே. இம் மூன்று குறளாலும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.