ஞா. தேவநேயப் பாவாணர்
எந்தெந்த வேளைக்கும் ஏற்றமை பண்பார் இந்தியெதிர்ப்பாளர் ஏனையர் என்பார்
2
பலதமிழ்க் காவலர் என்பார்
―
அவர்
(இந்த)
ஒருதமிழ்க்கும் ஒன்றும் உதவாத பண்பார்
கலவை மொழிஎன்றும் கையாளுந் தென் பார் கற்றவர்க்கே தமிழ்ச் சொற்றூய்மை என்பார்
3
தனித்தமிழ்க் காவலர் என்பார் – அவர்
தனித்தமிழ் வல்லாரே தழைக்க விரும்பார்
நுனித்த தமிழ்ச் சொல்லை நோக்காத பண்பார்
(இந்த)
நொய்ய வகையெல்லாம் பொய்சொல்லும் வன்பார் (இந்த)
99
111. தமிழைக் காட்டிக்கொடுக்கும் தமிழ்ப் பேராசிரியர் 'மகமதியர் குலத்தில் மாணிக்கமாய் விளங்கும்' என்ற மெட்டு
1
தமிழைக் காட்டிக் கொடுத்துத் தலைமைப்பதவி தாங்கும்
தமிழாசிரியர் கூட்டமே - இல்லையோ நாண் தான் ஒரு முழ நீட்டமே.
2
காட்டிக் கொடுத்துத் தமிழ் நாட்டைக் கெடுப்பவரைக்
கேட்டிற்குள் ளாக்குமுறையும்
―
ஒன்றில்லையா
கூட்டிற்குள் ளாக்குஞ் சிறையும்.
3
மன்னல மெதுமின்றித் தன்னலமதை யென்றும்
முன்னலமாக வைப்பவர்
―
இந்நிலத்தில்
எந்நலமாக நிற்பவர்.