ஞா. தேவநேயப் பாவாணர்
து. ப
அனைத்திந் தியமொழி நிலையாக
அறிவியல் மிகும்ஆங் கிலமாக
இணைத்த நிலங்களில் துணையாக
இயலும் வழிமொழி அதுவாக
(தலைமை)
241. ஆங்கிலம் இன்றி அறிவியல் இல்லை
'ஏர் முனைக்கு நேர்' என்ற மெட்டு
ப.
ஆங்கிலம் இன்றேல் இங்கே அறிவியல் இல்லை அறிவியல் இன்றேல் இங்கே உரிமையும் இல்லை
ஆங்கிலம் இங்கே வருமுன் அடிமைஎம் முன்னோர் ஆங்கிலத்தால் மாந்தரென ஆயினார் அன்னோர் ஆங்கிலரே நீங்கியபின் மீண்டும் எம்மனோர் அடிமையாக வந்ததிந்தி ஆளவே என்நேர்?
என் நேர்
—
என்ன முறை?
(ஆங்கி)
242. தமிழைக் கல்லாமைக்குப் பற்றின்மையே
கரணியம் (காரணம்)
ஆடிப்பாடி வேலை செய்தால்' என்ற மெட்டு
ப.
தாய்மொழிமேல் நேயங்கொண்டால் தடையொன் றிராது -அதில் தகுந்த சொல்லை அறிவதற்குத் தயக்க மிராது.
உ.1
சேய்மைநிலத்து மொழியும் வெட்கை சிறந்து கற்கும் நிலைமை
செறிந்தபல்லா யிரஞ்சொற்களைத் தெரிந்து நிற்கும் எளிமை
அதிற்
(தாய்)
201