222
இசைத்தமிழ்க் கலம்பகம்
266. மதுரை எழுத்தாளர் மன்றம்
பண்
தோடி
ப.
மதுரை எழுத்தாளர் மன்றம் மதியர் தமிழே வதியுங் குன்றம்
து. ப.
கதிரை நிகரும் புகழே மண்டும் கருமுத்து தி. சுந்தரமே கொண்டும்
உரைவேந்தர் துரைசாமி யிலங்கும் ஒளிர்பண்டாரகர் சுந்தரம் பிறங்கும் வரைமனோகர கருணையர் தங்கும் வல்லரண் தமிழ்ப்பாவை யரங்கும் கரைதவிர் மொழிக்கடலிற் கலங்கும் கலங்கரை விளக்கெனவே விளங்கும் திரைகடலடித் திரக்கித் துலங்கும் திருமுத்துக்களைத் தெரிந்து வழங்கும்
267. செட்டிகுளம்
பண் பூரிகலியாணி
ப.
செந்தமிழ்க்குச் சிறந்த செட்டிகுளம்
அங்குச்
சிறுவர்க்கும் பெருந்தகைக் கெட்டியுளம்.
து .ப.
முந்துமு மதுநாக முத்துவளம் பெற முற்றியே தமிழ்வெற்றி பெற்ற களம்
―
தாளம் - ஈரொற்று
(மதுரை)
(மதுரை)
தாளம் - முன்னை
இந்தி வடமொழிகள் ஏகஇன்னே நல்ல
-
இன்பத் தமிழ்கிளர்ந்தே எழுக முன்னே
செந்திறம் தமிழரும் சேர்க மன்னே நீடிச்
செம்மலாம் பச்சைமுத்துச் செறிக பொன்னே (செட்டி)
(செட்டி)