உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

264. சேலம் குகைத் திருக்குறட் கழகம்

221

பண் சிந்துபைரவி

ப.

குகைத் திருக்குறட் கழகம் ஒன்றே குமுறும் வள்ளுவன் தமிழை நன்றே.

து .ப.

தகைத் தமிழகம் முழுதும் இன்றே

தகுபுலவரைத் தழுவி நின்றே.

தாளம்

(குகைத்)

முன்னை

திகைத்தவர் உளந்தெளிக என்றே திருவள்ளுவனைத் தெரிந்து முன்றே பகைத்தவரையும் பரிவில் வென்றே பரமன் அருளும் பெறவே பின்றே

(குகைத்)

265. செங்காட்டுப்பட்டி முத்தமிழ்க் கழக வண்மை

‘சாமி நீ துணை செய்குவாய்' என்ற மெட்டு

பண்

சீராகம்

ப.

செங்கை முத்தமிழ்க் கழகம் - முது

செழியன் தமிழ் பழகும்

து .ப.

செங்கைப் பொதுவர் முதல் சிறந்த அறுபதின்மர் சிதலை தினும்ஆல் மதலை புரையும்

தாளம் - முன்னை

கங்கை பனிமலை கொண்ட வேந்தரும் கடந்து போயினார் எங்கே செல்லினும் ஈகை மன்னரும் இலரே ஆயனார்* பொங்கல்தொறும் ஓர்ஏழைப் புலவன் மகிழ்வு பொங்கச் செங்கை நிறைய வெண்பொன் வழங்கும்

ஆயனார் ஆய் அன்னார். ஆய் - கடைவள்ளல்.

(செங்)

(செங்)

(செங்)