234
2
நாவலந் தேயமே நாற்பானைங் கோடி
நானிலம் முழுவதும் நானூறு கோடி
தாவுமன் பதைத்தொகை தகுதிமேற் கூடி
இசைத்தமிழ்க் கலம்பகம்
தடுக்காவிடின் இடுக்கண் அடுக்குவ கோடி
(இனி)
3
பக்கத்து நாட்டினர் படர்ந்திங்கு மிகுந்தார்
பாக்கித்தான் திபேத்தரும் சேர்க்கவே புகுந்தார்
அக்கரை நிலத்தமிழ் மக்கள்மீண் டுவந்தார்
அனைவர்க்கும் ஆண்டுதொறும் பிள்ளைகள் பிறந்தார்(இனி)
4
கல்லூரி யில்இடம் கற்கவும் இல்லை
கற்றபின் வேலையும் பெற்றிடற் கில்லை
எல்லாரும் வாழவே எதுவு மில்லை
இட்டிய வுரிமையும் விட்டிடும் எல்லை
5
உணவிற்கு வந்ததே ஒருபெருந் தட்டு உடமையும் பலவகை உற்றது முட்டு இனவுணர் வால்எங்கும் எழுந்தது கட்டு
இறந்திடும் போர்வரின் எல்லாமே பட்டு.
283. மணமக்கள் வாழ்த்து
(இனி)
(gloofl)
பண்
―
சிந்து பைரவி
ப.
மங்கலம் நீடியே மணமக்கள் வாழி நன்பொருள் கூடியே நலமே நீடூழி
து. ப.
எங்கணும் நிறைகின்ற இறைவனை நாடி இல்லறம் தரும்பல இன்பங்கொண் டாடி
தாளம் - முந்து
(மங்கலம்)