இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
5
தமிழர் என்னும் பெரும்பெயரைத்
தாங்கித்திரியும் உருவங்காள்! இமிழ்கடல் பொங்கி எச்சரித்தும் இன்னும் உணரா நன்மரங்காள்.
படுகாலி
―
படுக்காளி
(இது)
296. தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் கூடி மருந்தரைப்போம்' என்ற மெட்டு
ப.
இதுவே விடுதலைப் போர்
இந்தியை
இந்நாட்டில் ஒழித்தேதீர் - ஏ தமிழா!
1
ஆங்கிலர் ஆட்சிமுன் நீங்கி
அடைந்தனர் விடுதலை வடவர்
ஈங்குநாம் விடுதலை வேண்டின்
இந்தியை ஒழித்திட வேண்டும், வேண்டும்
(இதுவே)
2
இருமொழித் திட்டமே இனிமேல்
இந்நிலம் நிலவுற வேண்டும்
அருகிய வாழ்நாள் யாண்டும்
அறிவியல் கற்றிடவேண்டும், வேண்டும்
(இதுவே)
3
மந்திரிப் பதவியை வேண்டி
இந்தியைப் புகுத்தி ஈண்டும்
செந்தமிழ்க் கேகுழி தோண்டும்
மந்திகள் ஒழியவேண்டும், வேண்டும்
(இதுவே)
243