214
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல்
ஒரு சொல்லையாவது தொடர்மொழியையாவது கிள வியமாக விரிப்பதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், ஒரு தனிவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றலாம்.
கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :
தனிவாக்கியம்
- அமைச்சரது வரவு எனக்குத் தெரியாது.
கலப்புவாக்கியம் : அமைச்சர் வருவார் என்பது எனக்குத்
தனிவாக்கியம்
தெரியாது.
அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங்கை ஒத்துக்கொள்வர்.
கலப்புவாக்கியம் : அனைவரும் ஆங்கிலேயர் ஒழுங் குள்ளவர் என்பதை ஒத்துக்கொள்வர்.
தனிவாக்கியம் :
ஒருகடவுட் கொள்கை இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை.
கலப்புவாக்கியம்: கடவுள் ஒருவரே என்னும் கொள்கை
இன்னும் உலகில் சரியாய்ப் பரவவில்லை.
தனிவாக்கியம் : இன்றைக்கு
பார்த்தேன்.
நான்
மழையை
எதிர்
கலப்புவாக்கியம் : இன்றைக்கு நான் மழை வருமென்று
எதிர்பார்த்தேன்.
தனிவாக்கியம் : அவர் தன்மையை ஒருவரும் அறியார்.
கலப்புவாக்கியம் : அவர் இன்ன தன்மையரென்று ஒருவரும் அறியார்.
பயிற்சி
கீழ்வரும் தனிவாக்கியங்களைப் பெயர்க்கிளவியக் கலப்பு
வாக்கியமாக மாற்றுக:
(1) ஒருவன் அயலார் உதவியை எதிர்பார்க்கக்கூடாது.
(2) நடந்ததைச் சொல்.
(3) மதுவிலக்குச் சட்டம் இன்று ஆட்சியி லிருக்கின்றது.
(4) நான் கணக்கைக் கடினமெனக் கருதவில்லை.