உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

நாற்பொருட்பேறு மக்களெல்லார்க்கும் பொதுவா யிருக்கவும், அந் நான்கும் பிராமணர்க்கே யுரியவை யென்றும், அவற்றுள் முதன் மூன்றே அரசர்க்கும் முதலிரண்டே வணிகர்க்கும் முதலொன்றே சூத்திரர் என்னும் வேளாளர்க்கும் உரியவை என்றும், மதத்துறையும் குமுகாயத் துறையும் தழுவுமாறு இலக்கியத் துறையில் வகுத்து விட்டனர்.

ஒரு நாடகக் கதையை அல்லது பனுவலை அமைக்கும்போது அல்லது இயற்றும்போது, அக் கதை தலைவனின் குலத்திற் கேற்பப் பொருளை வகுக்க வேண்டுமன்பது, நூன்முறை யாகிவிட்டது. இதைக் கழகப் பாண்டியருள் ஒருவனும் நாடக நூலாசிரியனுமான மதிவாணனும் கடியாது மதிவீணனாயினன்.

66

66

அறமுதல் நான்கும் ஒன்பான் சுவையும் முறைமுன் நாடக முன்னோ னாகும்'

99

அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப.

அறம்பொரு ளின்பம் அரசர் சாதி.

CC

66

அறமேற் சூத்திரர் அங்க மாகும்.

99

99

(செயிற்றியம்)

இங்ஙனமே தொண் (ஒன்பான்) சுவைகட்கும் வரணப் பாகுபாடு வகுக்கப்பட்டுள்ளது. இதனின்று, கடைக்கழகக் காலத்திலேயே, மூவேந்தரும் மதத் துறையில் எத்துணை அடிமடையராயினர் என்பதை அறிந்துகொள்ளலாம்.

களப்பாளர் (களப்பிரர்) ஆட்சி (தோரா. கி.பி. 300-590)

கடைக்கழக முடிவிற்குப்பின் பாண்டிநாட்டை முந்நூற்றாண்டு ஆண்ட, களப்பாளர் வடநாட்டினின்று வந்தவ ரென்றும், பல் வகுப்பின ரென்றும், பலவாறு சொல்லப்படுகின்றது. அவர் பல்வேள்விச்சாலை முதுகுடுமிப்பெருவழுதி பிராமணர்க்கு அளித்த வேள்விக்குடிப் பட்டையத்தை மறுத்ததனாலும், முருக வழி பாட்டினர் என்று சொல்லப் படுவதனாலும், தமிழராகவும் இருந்திருக்கலாம். களப்புதல் = காடு வெட்டித் திருத்துதல். நெல்லை மாவட்டத்திற் சங்கரநயினார் கோவில் வட்டத்தில், களப்பாளர் குளம் என்று ஓர் ஊர் உள்ளது. களப்பிலார் என்பது கள்ளர் வகுப்பாரின் பட்டங்களுள் ஒன்றாக, பண்டிதர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் குறித்துள்ளார்.