உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

குறிப்பு: அவன் அவள் முதலிய ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றியபின், தான் தாம் என்பன படர்க்கைத் தற்சுட்டுப் பெயர்கள் (Reflexive Pronouns) ஆயின.

தன்மைப் பன்மைப் பெயரின் இரு வடிவுகளுள், யாம் என்பது தனித்தன்மைப் பெயரும், நாம் என்பது உளப்பாட்டுத் தன்மைப் பெயரும் ஆயின.

நீன் என்பது நீ என்று ஈறு குன்றி வழங்கி, 'இர்' ஈறு சேர்ந்து நீயிர் - நீவிர் - நீர் என்னும் பன்மை வடிவுகளையும் தோற்று வித்தது.

நகரம் மகரமாகத் திரியும்:

எ- -டு: நாம்-மனமு (தெ.), தென்பு - தெம்பு.

மகரம் வகரமாகத் திரியும்:

எ-டு: அம்மை-அவ்வை, குமி-குவி.

நகரம் தகரமாகத் திரிவதுமுண்டு.

எ-டு: நுனி-நுதி. நேரம்-தேரம்(நாட்டுப்புற வழக்கு). தேரம் - தேர் (இந்தி).

நீங்கள் என்பது மலையாளத்தில் நிங்ஙள் என்று குறுகியது போல், நூன் என்பது நுன் என்றும் நூம் என்பது நும் என்றும் குறுகும்.

நூன் - நுன் - துன் - து (இந்தி).

நூம்-நும்-தும் (இந்தி).

நான் நாம் என்னும் தன்மைப் பெயர்களின் முந்திய வடிவம் யான் யாம் என்றிருப்பது போல், நூன் நூம் என்னும் முன்னிலைப் பெயர்களின் முந்திய வடிவமும் யூன் யூம் என்றிருந்தன.

தகரம் சகரமாகத் திரிவது பெரும்பான்மை. எ-டு: மதி-மசி, மாதம்-மாஸ (வ.).

தமிழ் பிராகிருதம் சமற்கிருதம் தியூத்தானியம் இலத்தீன் கிரேக்கம்

நான் நாம் நூன்

மைன் அஹம்

ஹம்

வயம்

இக் வீ

எகொ

எகோ

நோஸ்

ஹெமெயிஸ்

து

த்வம்

நூம்

தும்

யூயம்

தௌ யூ

தௌ

வோஸ்

ஹுமெயிஸ்

மேற்காட்டிய திரிபுகளை யெல்லாம் உளத்திற் கொண்டு ஒப்பு நோக்கின், தன்மை முன்னிலைத் தமிழ்ப் பெயர்கள் பிராகிருதம் முதலிய ஐம்மொழிகளில் எங்ஙனந் திரிந்துள்ளன என்பது விளங்கும்.