உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 9.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ் இலக்கிய வரலாறு

நோக்கிக் கூறியதாக, வான்மீகியார் தம் வடமொழி யிராமாயணத்தில் வரைந்திருத்தல் காண்க.

1

அகத்தியர் இராமர் காலத்தவராதலாலும் அவர் மகேந்திர மலையை வாரியிடை வைத்தார் என்பதனாலும், அனுமன் மகேந்திர மலையினின்று கடலைத் தாண்டினான் என்பதனாலும் அகத்தியர் காலத்தில் அம் மலையின் மேற் பகுதி ஒரு தீவாக இருந்ததெனக் கருதலாம்.

திரிபுரமெரித்த விரிசடைக்கடவுள் என்றது, இறையனார் போலச் சிவபெருமான் பெயர் தாங்கிய ஒரு புலவரையே. இது குணசாகரர் தம் யாப்பருங்கல விரிவுரையில் திரிபுரமெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என்றும், திரிபுரமெரித்த விரிசடை நிருத்தர் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் என்றும், ஒரு புலவர் பெயரைக் குறித்ததை ஒருபுடை யொத்தாகும்.

குன்றெறிந்த முருகவேள் என்றது முருகன் என்னும் பெயர் கொண்ட புலவரையே. பெயரொப்புமை பற்றி மாந்தரைத் தேவரெனக் கொண்டது, எழுதப்பட்ட வரலாறின்மையையும் அப் புலவரின் சேணெடுந் தொன்மை யையும் காட்டும்.

66

ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை யென்பார் செந்தமிழில் வெளியிட்ட ஈழமும் தமிழ்ச்சங்கமும் என்னுமொரு கட்டுரை யில், கி. மு. ஐந்நூற்று நாற்பத்து மூன்றாவது ஆண்டில் விசயன் என்னும் அரசன் சிங்கள அரசினை நிலைபெறுத்துவதற்கு முன், தமிழரது அரசு இலங்கையில் இருந்ததென்றும், ஈழநாட்டு வேந்தர்க்கு முடிநாகரென்ற பேர் இருந்ததென்றும், அந் நாட்டிற்கே நாகத்தீவு என்ற பெயர் வழங்கிய தென்றும், நாகர்கோயில், முசிறி என்ற பெயர்கள் ஈழநாட்டில் வழங்கின வென்றும், சோழன் மணந்த நாககன்னிகை அந்நாட்டு அரசன் மகளென்றும், இளநாகன் என்னும் அரசன் கி.பி. 38-ல் அவண் அரசாண்டா னென்றும் கூறுதலால் உதியஞ் சேரலாதனைப்

992

பாடிய முடிநாகராயர் ஈழமன்னர் மரபினராயிருத்தல் கூடுமென்று கருதுதற்கு இ டமுண்டு என்று கூறியுள்ளார் பேரா. கா. சுப்பிரமணியப் பிள்ளை. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இடைக்கழகத்திற்குப் பிற்பட்ட பாரதக் காலத்தவனாதலால், அவனைப் பாடிய முடிநாகராயர்

1. கிருஷ்ணஸ்வாமி ஐயரின் வால்மீகி ராமாயண மொழி பெயர்ப்பு - கிஷ்கிந்தா காண்டம், பக்.377-8

2. இலக்கிய வரலாறு, முதற்பாகம், ப.31

தலைக்கழகத்தில் இருந்திருத்தல் முடியாது. அப் பெயரார் ஒருவர்