உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் 9

காமையையும், அடங்கியமையையும் காட்டும். இப்படியே பிற அடக்கங்களைக் கொண்டவர்களையும், கொள்ளாதவர்களையும் நாம் நாள்தோறும் கண்டுகொண்டு தானே இருக்கிறோம்.

ஆமை உறுப்புக்களை அடக்கிக் காக்கிறது அதன் ஓடு; அதுபோல் மாந்தர் உறுப்புக்களை அடக்கிக் காக்கிறது அறிவால் அமைந்த செறிவு அல்லது உரன்! ஊக்கமுடைமை என்பதும் அதுவே! அடக்கமுடைமை எனினும் சரியே!

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து.”

99