உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

81

துன்புறுத்தியவர்களது நன்மை கருதி நாம் பொறுத்தல் பெருமை. இல்லையேல் நம் நன்மை கருதியாவது பொறுக்க வேண்டாமா?

அப்படி என்ன நன்மை நமக்கு உண்டாகின்றது?

தீமை செய்தவர்க்குப் பதில் தீமை செய்பவர்கள் ஒருநாள் அடையும் சிற்றின்பமே இன்பமாகக் கொள்கின்றனர். தீமை செய்தவர்களைப் பொறுத்துக் கொண்டவர்களுக்கோ இறக்கும் அளவும் இன்பம் உண்டாகின்றது.

யார் இறக்கும் அளவுக்கும்?

தீமை செய்தவன் இறக்கும் அளவுக்குமா?

இல்லை!

தீமையைப் பொறுத்துக்கொண்டவன் இறக்கும் அளவுக்குமா? இல்லை!

இந்த உலகம் — உலகச் சான்றோர்—இறக்கும் அளவுக்கும்! ஆம் உலகம் அழியும் வரை, பொறுத்தார்க்குப் புகழ் உண்டு.

அவரே பூமி ஆள்வார்!

பிறர் சில்லாண்டுகள் ஆண்டு மாண்டு ஒழிவர்.

“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்.”