இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
84
இளங்குமரனார் தமிழ்வளம் 9
அழுக்காறு செய்யும் தீமைகள் ஒன்றா இரண்டா?
அறத்தைக் கெடுக்கும்!
ஆக்கத்தைத் தொலைக்கும்!
அழியாப் பகையை ஆக்கும்!
அரு நரகத்துத் தள்ளும்!
வை போதாவா? ன்னும் அழுக்காறு செய்யும் கேடுகள் உள.
'கொடு' எனக்கேட்டு ஒன்றை இரந்து நிற்பது இழிவு. 'வாங்கிக் கொள்க' என விரும்பித் தருவது சிறப்பு. இச் சிறப்பினை எவரும் பெற விரும்ப வேண்டும். சிறப்பினையும் பெறக் கருதாமல் கொடுப்பவரே தெய்வக் கொடையாளர்.
ஒருவன் கொடுக்க நிற்கிறான்; ஒருவன் இழிவென்று பாராமலும் வாங்க நிற்கிறான்; இதனைத் தடுக்கவும் ஒருவன் நிற்கிறான்! தடுக்க நிற்பவனைப் போல் கடையாயவன் ஒருவன்