102
இளங்குமரனார் தமிழ்வளம் - 9
வேண்டுமா? கொதிக்கும் அக் கொப்பரையில் தூக்கிப்போடும் கொடுமைக்கு அஞ்ச வேண்டுமா?
கொடிய சொற்களுக்கு அஞ்ச வேண்டுமா? கொடிய சொற்களைத் தேடி எடுத்து அடுக்கிக் கேட்போரைக் கொதிப்பேற்றிக் கொலைக்குத் துணை செய்யும் வன்கொடுமைக்கு அஞ்ச வேண்டுமா?
ஆம்! அறிவும் உணர்ச்சியும் இல்லாத பொருள்களுக்கு அஞ்சி வாழ வேண்டியது இல்லை. அவை ஒரு தன்மை பற்றியன. அவற்றை அடக்கி ஆள்வோன் கருத்துக்கு ஏற்பத் தொண்டாற்றித் துணைபுரிவன. அல்லது அழித்துக் கெடுப்பன. ஆனால் உணர்ச்சியும் அறிவும் உடைய மனிதன் தான் தேடிப் போய்த் தீமை செய்வான். உள்ளத்தே கருவாக வைத்திருந்து காலம் அறிந்து தீமை புரிவான். தீமை புரிந்ததாக வெளிக்கும் தெரியாமல் அடக்குவான். தான் செய்த தீமையைப் பிறர்மேல் ஏற்றிப் பெருந்தீமையும் புரிவான். ஆனால் உயிரற்ற அற்பப் பொருள்களோ இவற்றைச் செய்யா. இவ்வாறு எண்ணினால் தீயின் சிறப்புப் புலப்படும்; தீமையின் இழிவும் புலப்படும்.
தீ வேறு; தீமை வேறு; தீ நன்மை செய்யும் ஓரொரு வேளை பிறர் ஏவுதலாலும் இயற்கை விளைவாலும் கேடு செய்யும். அதற்கு அத் தீ காரணமில்லை. ஆனால் தீமை எந்த ஒரு நன்மையும் செய்யுமா? தீமையிலிருந்து நன்மை காண்பது என்பது நஞ்சிலிருந்து அமுது காண்பது போல்வது. எந்தத் தீமையும் நன்மை ஆகாது. நன்மை வேண்டுமானால் செய்யத் தகாத முறையால் செய்யப் பெற்றுத் தீமை விளைக்கலாம். எந்த நல்ல முறையால் செய்தாலும் தீமை தீமைதான் தரும். வேண்டுமானால் நுண்ணறிவுடன் செய்யும் தீமை - மற்றைத் தீமைகளினும் பல்லாயிர மடங்கு தீய விளைவுகளை ஆக்கலாம். இவ்வளவும் தெளிந்த பின் தீயிற்கு அஞ்சவேண்டும் என்போமா? தீமைக்கு அஞ்சி ஓடுங்கவேண்டும் என்று உறுதி செய்வோமா?
“தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்"
என்று திருவள்ளுவர் அச்சுப் புத்தகங்களின் வாயிலாகப் பேசு கின்றார். ஆனால்