உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் 9

இத்தகைய சிறப்பு, தவத்திற்கு ஏற்படவே தவத்தோர்போல நடிப்பவர்களும் மிகுந்து விட்டனர். எந்தவொருநல்லபொருளுக்கும் போலிப் பொருள் உண்டாவதோ படைக்கப்படுவதோ உலகியலில் காணப்படுவது தானே!

டையே பொய்த் தவத்தோர்

மெய்த் தவத்தோர்க்கு தோன்றிவிட்டபின், மெய்யர் எவர், பொய்யர் எவர் என்பதைக் கண்டுபிடிப்பது அரிதாகி விட்டது. பொய்த் துறவியர் போற்றப் பெற்றதும்,மெய்த் துறவியர் பழிப்புக்கு ஆட்பட்டதும்உளதாயிற்று. ஆம்! ஏமாற்றுவோர் தொகை மல்கிய காலங்களிலெல்லாம் ஏமாறுவோர் தொகை பெருகாமல் தீராதே!

திருக்கோவலூர் வேந்தர் மெய்ப்பொருள் நாயனார். தவத்தோரை —துறவிகளை -பேணுவதே கடைத்தேறும் வழியெனக் கொண்டு ஆண்டு வந்த பெருந்தகை. அவரை நாடி வந்தார் ஒரு துறவி! "துறவி தேடி வந்தால் தடையாதுமின்றி உள்ளே வரவிடுக" என்பது வேந்தன் ஆணை! அதன் வழி நிற்க வேண்டிய வாயிற் காவலனும், மெய்காப்பாளனும் துறவியாரை வேந்தன் இருக்கும் தனி மாளிகைக்கு அனுப்பினர்; போன துறவியோ, 'சிவபெருமானால் அடியார் உய்யும் வண்ணம் அருளிச் செய்யப்பெற்ற அரிய வேதப் பொருள் ஒன்றை உனக்குக் கூறுமாறு வந்தேன்” என்றார். மெய்ப் பொருளாளர், “தாங்கள் என் மாட்டுக் கொண்டுள்ள பெருங் கருணைக்குக் கடப்பாடு

முகில்