திருக்குறள் கட்டுரைகள்
133
ஒழுக்க நெறியினருக்கும் எதிர்ப்புக்கள் ஏற்படலாம். ஏச்சுப் பேச்சுக்கள் எய்தலாம். கல்லடி சொல்லடி கிட்டலாம். என்ன கிடைத்தாலும் புன் முறுவலுடன் ஏற்றுக்கொள்ளும் புகழ் பூண்ட பொறுமை நிலை லை வேண்டும். கொள்கை உறு கொழுந்து விட்டெறியும் சுடராக ஓங்குதல் வேண்டும். ஒதுங்கிச் செல்பவர்களையும் ஒன்றிச் சென்று அனைத்துக்கொள் ளு ம் அருமை வேண்டும். இவ்வாறு அமையின் ஒரு நூற்றாண்டு அளவிலேனும் வஞ்சம், சூழ்ச்சி, திருட்டு, பொய் அகன்றொழிய ய வாய்ப்பு உண்டு. இத்தகைய காலத்தேதான், தீயது செய்வதை அன்றித் தீயது நினைப்பதும் குற்றமே என்னும் கொள்கை உருவாகும். 'நினைத்தலும் செய்தலோடு ஒக்கும்' என்னும் ஆன்றோர் ஆய்வு நெறி இடம் பெறும்! இந்நெறி முதிர்ந்த காலத்தேதான்.
உ
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்.'
என்னும் வள்ளுவம் கொடி கட்டிப் பறக்க முடியும்.
இஃதிலா நிலைமையில் வயிற்றுப் பாட்டுக்காகத் திருடுபவன், மானங் காக்கும் உடைக்காகக் களவு செய்பவன், கசக்கிப் பிழியும் கடன் தொல்லைக்காகக் கொள்ளையடிப்பவன், ஆம்-கன்னக் கோல் எடுத்து இடித்தும் காரிருளில் கதவுகளைத் திறந்து காணாமல் திருடியும் செல்பவர் மட்டுமே திருடர்கள் பட்டியலிலே இருக்க, சிறைக் கூடத்திலே நலிய, தூக்குக் கயிற்றிலே தொங்க நேரிடும்! பொய்யும் புரட்டுமான கணக்கு எழுதி, அரசாங்கத்தின் கண்ணிலேயும், பொதுமக்கள் கண்ணிலேயும் மண்ணைத் தூவி, இருப்புச்சரக்கை இருட்டடிப்புச் செய்து, கள்ளச் சந்தையில் ஒன்றுக்குப் பத்தாய் விலையிட்டுப் பணஞ்சேர்த்தும், பஞ்சு மெத்தையிலே ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டு அநியாய வட்டி வாங்கி என்புருக்கி நோய்போல் சமுதாயத்தை அரித்துச் செல்வம் திரட்டியும், அதிகாரத்தாலும், பதவியாலும் பெறும் சம்பளத்தினும் பன்னூறு மடங்கு 'கிம்பளம்' என்னும் பெயரால் பணம் குவித்தும் வாழ்வோர் சமுதாய மேலோராய் ஏறு நடையிட்டு உலவித்திரியுநிலை மாற்றமுறப் போவது இல்லை.
தவறும் இடத்திலெல்லாம், தவறுபவரையெல்லாம் எவ்விடத்தும், எவரும் தட்டிக் கேட்பார், சமுதாயத்தினர் தம்