142
இளங்குமரனார் தமிழ்வளம் – 9
எளிதாகக் கிளம்பி வன்கொடுமை புரியும் சினத்திற்கு மனிதன் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வந்தபின் காப்பவனிலும், வருமுன் காப்பவனே பெரியன் என்பது முதுமொழி! கோபத்தைக் காப்பதைப் பொறுத்த அளவில், இம் முதுமொழியைத் தெய்வ மொழி என்றாலும் தகும்.
கோபமும் நஞ்சும் இணை என்பர்—செயலால்; பல், கண், உடல் ஆகியவை நஞ்சுண்டால் கருகும்; உரை குழறும்; உடல் துடிக்கும்; மயக்கம் ஏறும் மதி மருளும்; இத்தன்மைகள் அனைத்தும் சினங் கொண்டவனுக்கும் உண்டு. ஒருவன் தீராச் சினத்தனாகக் கொதித்தெழும்போது அவன் எழில் முகத்தைப் பளிங்கில் பார்க்க வேண்டும். அல்லது நிழற் படம் ஒன்று எடுத்து அவன் அமைதி கொண்ட நேரம் காட்ட வேண்டும். அப் பொழுது அழகு ஒழுக அமைந்த அவ்வெழில் ஓவியம் அவனைக் கண்டு நகை செய்யும். அறிவுடையன் ஆயின் அழுவான்; ஒரு வேளை திருந்தவும் கூடும்.
கோபம் செய்யும் கொடுமைகள் ஒன்றா இரண்டா? 'கோபம் பாவம் சண்டாளம்' என்று அடுக்கியதெல்லாம் ஒரு பகுதிதான்; முழுமை அன்று. காட்டில் ஒரு மரத்தில் பற்றிக் கொண்ட தீ அதனோடு ஒழிகின்றதா? முதலாவது தீப்பற்றிய மரம் அழியும் பின், அடுத்தது அடுத்தது காடே அழியும்! இப்படித்தான் கோபம் கொண்டவன் தன்னோடு தன் குடியையும் அழிக்கிறான். இதனால் அன்றோ சினம் என்பது ‘சேர்ந்தாரைக் கொல்லி' என்றார் வள்ளுவர். 'சேர்ந்தாரைக் கொல்லுவது எது? தீ! இங்குத் தீயாக இருப்பது சினம்! இது சுட்டெரிப்பது இனம்! எப்பொழுதும் உதவுவதற்குக் காத்து நிற்கும் ஒரு பெரும் னத்தைச் சுட்டெரிக்க முந்து நிற்கும் சினம் செய் கொடுமை அளவில் படுமா?
உடற் கூறு ஆய்ந்தவர்கள் கூறுகிறார்கள்: ஒருவன் மகிழ்ச்சி யடைகிறான் என்றால், வாய் விட்டுச் சிரித்து இன்புறுகிறான் என்றால் அப்பொழுது பணி புரியும் நரம்புகள் பதின் மூன்றாம். ஆனால், அவன் முகங் கடுகடுத்துக் கொடுங் கோபத்திற்கு ஆளானான் என்றால் அப்பொழுது வேலை செய்யும் நரம்புகள் நாற்பத்து ஏழாம்!" என்னே சினத்தின் கொடுமை!
விரும்பிச் செய்ய வேண்டிய எளிய இனிய சிரிப்பை மனிதன் புறத்தே தள்ளுகிறான்! வெறுத்து ஒதுக்க வேண்டிய