32. எது வியப்பு?
மூன்று வயதிலே திருஞானசம்பந்தர் மணிமணியான தேவாரத் தீந்தமிழ்ப் பாடல்கள் பாடினார். இஃது உண்மை தானா என வியப்படைகிறோம்.
ஐந்து வயதுவரை ஊமையாக இருந்த குமரகுருபரர், முருகன் அருளால் கந்தர் கலிவெண்பா என்னும் மெய்யுணர்வுப் பெருநூலை ஊமை நீங்கிய அந்த வேளையிலேயே பாடினார். தனை நம்ப முடியுமா என ஐயமுறுகிறோம்.
ஏழு வயதுப் பாரதியார் எழுச்சிமிக்க நாட்டுப் பாடல்களும், தெய்வப் பாடல்களும் பாடினார். 'புலவர்களுக்குப் புலி' என்று கூறப் பெறும் வெண்பாக்களைப் பாடி,
முகில்
லக்கணப்
புலவர்களெல்லாம் மூக்கிலே விரல்வைத்து இமைகொட்டாது பார்த்து நிற்கச் செய்தார். இதனை நம்பமுடியாவிட்டாலும் நம்புகிறோம். அண்மைக் காலத்தே இருந்ததாலும், அவருடன் இருந்தோர் இன்றும் இருந்து உண்மையை உரைத்துக் கொண்டு இருக்கின்ற காரணத்தாலும்!
இளம் பருவத்திலே ஏற்படும் புலமை முதிர்ச்சியைக் கண்டு வியக்கிறோம்! முதுமையிலே ஏற்படும் எழுச்சி, இளமை உணர்ச்சி இவற்றையும் கண்டு வியக்கிறோம்; நயக்கிறோம். 'எழுபதாம் அகவையில் இத் தகைய எழுச்சியா' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.-வைக் கண்டு நாடு வியக்க வில்லையா? இன்றும் இளையராய்த் திகழும் நேரு பெருமகனாரைக் கண்டு உலகம் வியக்கவில்லையா? இவ்வாறு வியப்பானேன்?
இளமைக்குத் தொடக்க அறிவும், சுறுசுறுப்பும் இயல்பு. முதுமைக்கு விரிந்த அறிவும், சோர்வும் இயல்பு. இவை மாறி