உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

செங்கதிர்

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

குலபதியார் என்னும் புலவர் திருக்குறளை விளக்குடன் ணைக்க விரும்பினார் அல்லர். கதிரோனுடன் இணைத்துப் பேசினார். கதிரோன் தாமரை மலரை மலர்த்துகின்றது; உலக ருளை ஓட்டுகின்றது. திருக்குறள் கற்பவர் இதயத் தாமரை மலரை மலர்த்துகின்றது; உள்ளத்து இருளை ஓட்டுகின்றது. இது குலபதியார் காட்டும் உவமைப் பொருத்தம்.

தினையும் பனையும்

சில பெரியோர்கள் குறட்பாக்களின் அடிச் சுருக்கத்தையும், பொருட் பெருக்கத்தையும் சான்றுகளால் நிறுவியுள்ளனர். அத்தகையவருள் ஒருவர் கபிலர். அவர் புல்லின் நுனியிலே ஒளியோடு திகழும் பனித்துளிக்கு இணையாகத் திருக்குறளைக் குறிக்கின்றார். பனித்துளிக்கும் உவமை காட்டி விளக்குகின்றார். தானிய வகைகளில் மிகச் சிறியது தினை; அத் தினையினும் சிறிதானது பனித் துளி; அப் பனித்துளிக்கு இணையான வடிவு உடையது குறள். வடிவால் மட்டுமோ குறளும் பனித்துளியும் ஒப்பாக உள்ளன. இல்லை; உள்ளடக்கியுள்ள பொருளிலும் ஒப்பானவையே. தினையளவில் சிறிதான பனித்துளி என்றாலும், அதன் முன் பனையொன்று நின்றால் அதன் உயரம், மட்டை, ஓலை, ஆகிய அனைத்தையும் சரியாக காட்டும். அத்தன்மை குறளுக்கும் உண்டு. குறள் குறுகிய வடிவு உடையதே என்றாலும் அதன் கண் அடங்கியுள்ள பொருள் பெரிதாம்! அப்பொருளும் தெளிவின்றி மயங்கச் செய்கிறதோ என்றால் அதுவும் இல்லை. பனித்துளி முன்னிற்கும் மலையைக்கூட வடிவு மாறாமல் காட்டுவதுடன், வண்ணமும் மாறாமல் காட்டுமே! அதுபோலவே குறளும் மயக்க மூட்டாத சிறப்பு உடையதாம் என்பது கபிலர் உட்கொண்ட பொருளாம்.

"தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட

பனையளவு காட்டும் படித்தால் மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவன் வெள்ளைக் குறட்பா விரி."

என்பது அவர் அருளிய அருமையான பாட்டு.

சாத்தனார் என்னும் புலவர் மன்னரும் மதிக்க வாழ்ந்த பெருந்தகை. அவர் சேரனது கொல்லிமலையையும், சோழனது நேரி மலையையும், பாண்டியனது பொதிய மலையையும் நன்கு