உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 23.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 2

177

இன்னும் அறுபத்தாறு திருமால் கோயில்களுங் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. அற்றன்று,முதலாழ்வார் பாட்டுக்களில் திருமால் கோயில்கள் எல்லாம் எடுத்துரைக்கப்படாமை பற்றி, அவை அக்காலத்து மிகுதியாய் இல்லையென்றால் யாங்ஙனம்? முதலாழ்வார் மூவரும் தொண்டை நாட்டவர்களாதலின், அவர் அந்நாட்டைவிட்டுச் சோழநாடு பாண்டிநாடு சேரநாடு களுக்குச் சென்றிலர். அதனால் அவர்கள் ஆங்காங்குள்ள திருமால் கோயில்களைப் பாடிற்றில ரென்னாமோ வெனின்; என்னாம். சோழநாட்டின்கண் உள்ள 'திருக்குடந்தை’ திருவரங்கம்’ 'தஞ்சை’ என்பன பூதம் பேயாழ்வார் பாடல்களிலம், பாண்டிநாட்டின்கண் ணுள்ள 'திருமாலிருஞ் சோலைமலை', 'திருக்கோட்டியூர்' 'திருத்தண்காலூர்’ என்பனவும் சேரநாட்டின்கண் உள்ள 'திருவனந்தை' என்பதும் அங்ஙனமே அவ் விருவர்தம் பாக்களிலும் பாடப்பட் டிருத்தலின் அவர்களுட் பூதத்தாழ்வார் பேயாழ்வார் இருவரும் தொண்டைநாட்டிற்குப் புறம்பே சென்றிலரென்றல்

பொருந்தாது. அங்ஙனமன்று, அவர்கள் தொண்டைநாட்டில் இருந்தபடியே ஏனை நாடுகளிலுள்ள அத்திருக்கோயில் களையும் பாடினார்களெனக் கொள்ளாமோ வெனின்; அற்றேல், அந் நாடுகளிலுள்ள ஏனைப் பெரும்பாலனவற்றை விட்டு அவற்றுட் சிலவற்றை மட்டுமே அவர்களுள்இருவர் பாடியதும் ஏனைப் பொய்கையார் அச்சில தாமும் பாடாமையும் என்னையென்பார்க்கு விடை கூறுதல் ஆகாமை யானும், அவர்கள் பாடிய அச் சில திருக்கோயில்களைத் தவிர வேறுபல இருந்தனவென்பதற்கு வேறொரு சான்றும் இல்லாமையானும், முதலாழ்வார் மூவர் காலத்தும் இருந்த திருமால் திருக்கோயில்கள் அவர்களுடைய பாக்களிற் குறிப்பிடப்பட்ட அச்சிலவே தவிரப் பிற இருந்திலவென்பது தேற்றமாம் என்க.

மற்று, மாணிக்கவாசகப் பெருமான் அருளிச்செய்த ‘திருவாசகம்’, 'திருவைகோவையா’ரிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான் திருக்கோயிலுள்ள திருப்பதிகள் ஐம்பத்து நான்கு; அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் என்னும் மூவரும் அருளிச்செய்த தேவாரங்களிற் குறிப்பிடப்பட்ட சிவபிரான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_23.pdf/186&oldid=1588625" இலிருந்து மீள்விக்கப்பட்டது