உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

135

தெளிவாக, (இந்தியாவில் ஆஜ்மீரிலுள்ள) அரவல்லி மலைத்தொடரும் பிற மலைகளுமானவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதன் தென்கிழக்கில் ஓர் ஆழ்ந்த பள்ளத்தாக்கு இருக்கிறது. அது தொல்லூழிகளில்,

இந்தஸ் (Indus) ஆற்றுப் படையின் தொடர்ச்சியாயிருந்த தென்பது தேற்றம். இதிலிருந்து ஒருவர், அப் பெரிய நிலப்பரப்பின் முழுமையும் இந்தஸ் ஆற்றின் பகுதியும், ஒரு பெருவாரியான எரிமலை யெழுச்சியில், சொல்லப் போனால், தலைகீழாக அமிழ்ந்தன என்றுதான் அனுமானிக்க முடியும் என்று அவ் வியன்புலவர் சொல்லுகிறார்,”

(இவ்

குரிய திணைப்படத்தை இப் புத்தக முகப்பிற் காண்க.)

(5) திருவாளர் சாண் இங்கிலாந்து

66

-

வுருப்படிக்

கோடி யாண்டுகளுக்கு முன் ஒருவேளை அதற்கு மிக முந்தி - ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவை யும் ணைத்திருந்தது. மாந்தன் அப்போது ஞாலத்தில் தோன்றியே யில்லை. அக் கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டாமா வும் லெமுர் என்னுங் குரங்கினமும் பூத ஆமையும் குடியிருந்தன.'

55

உலகம் ஓர் இன்பமான கானகமாயிருந்தது. எனினும், பறவைகள் பாடவில்லை; ஏனென்றால் அவை அப்போது இல்லை. இங்ஙனம் சில வகைகளில், இப் பெருங் கண்டம், ஒவ்வொன்றும் பெரும்போடாயிருந்த உயிரிகளுடன் அமைதியாகவும் இயற் கைக்கு மாறுபட்டு மிருந்தது.

66

'அது தோன்றி, அல்லது நிலையாகவே 20,000,000 ஆண்டுகள் போலிருந்தது. பின்பு மூழ்கத் தொடங்கிற்று.... என்று சாண்

இங்கிலாந்து கூறுகிறார்.

மொழிக்கு

ங்ஙனம் மறுக்கமுடியாத பல சான்றுகளிருக்கவும், வட ழிக்கு மாறாகத் தமிழுக்குப் பெருமை வந்துவிடுமே என்றெண்ணியோ, அல்லது வேறு காரணத்தாலோ, இந்திய சரித்திராசிரியர் குமரிநாட்டைப்பற்றி இன்னும் ஆராயாமலும், பிறர் ஆராய்ந்து கூறியதை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கின்றனர். எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?

23 The Hindu, July 3, 1938.