234
ஒப்பியன் மொழிநூல்
கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி”57
27
36 வகையென்று அடியார்க்குநல்லார் கூறுவதினின் றறியலாம்.
என
ம்
“ஆவி யன்ன வவிர்நூற் கலிங்கம்” (பத். 4 : 169) என்பதி னாலும், பாலாடைக்கும் பஞ்சாடைக்கும் ஆடையென்னும் பொதுப்பெயர் இருத்தலாலும், பாம்பு கழற்றிய மீந்தோல் சட்டையெனப் படுதலாலும், இக்காலத்திற் சூழ்ச்சியப்பொறியால் நெய்யும் நொய்ய ஆடை வகைகள் போன்றே, அக்காலத்திற் கைத்தறியால் தமிழர் நெய்து வந்தனர் என்பதறியப்படும்.
நெசவுபற்றிய சில தமிழ்ச்சொற்கள் மேலையாரிய மொழிகளில் வழங்குகின்றன.
பன்னல் = பருத்தி. L. pummus, cotton, It. pammo, cloth.
கொட்டை = பஞ்சு. Ar. qutum, It. cotone, Fr. coton, E. cotton.
கொட்டை நூற்றல் என்னும் வழக்கை நோக்குக. பருத்திக் காயினின்று கொட்டுவது கொட்டை.
வேட்டி = ஆடை. L. vestis, Skt. வஸ்த்ர, E. vesture.
வெட்டுவது வேட்டி. ஒ.நோ: துணிப்பது துணி. அறுப்பது அறுவை. வேட்டியை வேஷ்டி என்று தமிழரே தவறாய் வழங்குகின்றனர். இது இன்னும் வடமொழிக்குட் புகவில்லை.
66
"தடுக்கப் பழையவொரு வேட்டி யுண்டு” என்று பட்டினத்தார் கூறுதல் காண்க. (திருத்தில்லை, 17)
சேலை = (சீலை) நீண்ட அல்லது அகன்ற துணி.
A.S. segel, E. sail.
=
-
தச்சு = L. texo, E. texture, anything woven. தை + சு = தைச்சு தச்சு. தைப்பு. தச்சு என்னும் பெயர் சரியானபடி நெசவுக்குரியதேனும், மரக்கொல்வேலைக்கு வழங்கிவருகின்றது,
தச்சு
27 சிலப். பக். 379.