74
ஒப்பியன் மொழிநூல்
தேவருலகாகக் கருதப்பட்டது. சாவகத்தின் பண்டைத் தலைநகரான நாகபுரத்திற்குப் போகவதிபுரம் என்றும் பெயருண்டு. மலேயத் தீவுக்கூட்டத்தில், சாவகம் பலி முதலிய தீவுகள் இன்றும் ஆடல் பாடலுக்கும் பிறவின்பங்கட்கும் சிறந்திருப்பது கவனிக்கத் தக்கது.
நடுமாகாணத்தி(Central Provices)லுள்ள முண்டரின் முன்னோர், கீழ்த்திசையிலிருந்த நாகநாட்டாரே. வங்காளக் குடாவிலிருந்த பல தீவுகள் அமிழ்ந்துபோனபின், அவற்றினின்றும் எஞ்சினோர் இந்தியாவின்
என்க.
கீழ்ப்பாகங்களிற்
முண்டரின் முன்னே நாகர் என்பதற்குச் சான்றுகள்
குடியேறினர்
அகப்படு
(1) சின்ன நாகபுரத்திலிருந்து மலேயத் தீவுக்குறை (Malayan Pen- insula) வரையும், ஒரேவகையான கற்கருவிகள் வதுடன் பல பழக்கவழக்கங்களும் ஒத்திருக்கின்றன.
20
(2) முண்டா மொழிகளும், நக்கவாரத் தீவுகளில் வழங்கும் ழிகளும் மலேயத் தீவுக்குறையின் பழங்குடிகள் வழங்கும் மான்குமேர் (Mon - Khmer) மொழிகளும் ஒரினமென்று கொள்ளும் படி, பல முக்கியச் செய்திகளில் ஒத்திருக்கின்றன.
21
மான்குமேர், முண்டா, திராவிடம் என்னும் முக்குடும்ப மொழிகளும் பின்வருபவற்றில் ஒத்திருக்கின்றன.
i. சொன்முதலில் ஒரு மெய்க்குமேல் வராமை.
ii. சொல்லின் ஈற்றில் அரையொலிப்பு மெய்கள்.
iii. மூவிடப்பெயர்களிற் சில, பெயர்களுடன் சேர்ந்து கிழமைப் பொருள் தரல்.
iv. பல சொற்கள்
முண்டா
மான்குமேர்
தமிழ்
தம்
மூ
முஹ்
தமர் (துளை) மூக்கு
புரு
ப்ரி
பொறை (மலை)
பிர்
ப்ரி
மரம்
ஜம்
சௌ
சப்பு (உண்)
20 L.S.I. Intro. p. 1
21
L.S.I., pp. 10, 15