92
பிறழ்ந்தவை
அத்ய = இன்றைக்கு
அத்ர = இங்கே
பிறழாதவை
ஒப்பியன் மொழிநூல்
இ(த்)தி = இப்படி
இத்தம் = இவ்வாறு, E. item.
இந்தியில் இதர் உதர் என்ற சொற்கள் தமிழியல்புப்படியே
யிருத்தல் காண்க.
(4) சொற்கள் தோன்றிய பிறவகைகள்
சைகையும் சொல்லும் : இத்துணைப்போல, அவ்வளவு. ஒப்புமை : காடைக்கண்ணி, ஆனைக்கொம்பன், கரடிகை. எழுத்துத்திரிபு : புழலை - புடலை, பெள் - பெண்.
திரிசொல் : கிளி - கிள்ளை, மயில் - மஞ்ஞை
மரூஉ : பெயர் -பேர்,கிழவர்-கிழார்.
முதன்மெய்நீக்கம் : சமர் - அமர், தழல் -அழல்.
முதன்மெய்ப்பேறு : ஏண் - சேண்.
சிதைவு: எம்மாய் - யாய், நும்மாய் -ஞாய், தம்மாய்தாய். போலி : நாலம் - ஞாலம், நெயவு - நெசவு, குதில் - குதிர்.
இலக்கணப்போலி - சிவிறி (எழுத்துமாற்று), வாயில் (சொன் மாற்று), கோயில் (உடம்படுமெய்ம்மாற்று).
முக்குறை
முதற்குறை: தாமரை - மரை, ஆட்டுக்குட்டி - குட்டி.
இடைக்குறை : வட்டை - வடை, உருண்டை - உண்டை.
கடைக்குறை : தம்பின் - தம்பி, கோன் - கோ.
அறுதிரிபு (உலக வழக்கு)
வலித்தல் : கொம்பு-கொப்பு, ஒளிர் -ஒளிறு, பதர் - பதடி.
மெலித்தல் : போக்கு - போங்கு.
நீட்டல் : நடத்து - நடாத்து, கழை -கழாய்.
குறுக்கல்: ஆங்கு -அங்கு.
விரித்தல் :- முதல்விரி : காயம்-ஆகாயம்.