42
இளங்குமரனார் தமிழ் வளம் – 16
தமிழறம், இல்லறம், துறவு என ரண்டே. அவற்றுள் துறவரை அடுத்த குறளில் கூறுதலால் இக்குறளில் கூறுபவர் இல்லறத்தாரே; அவரும் தந்தை, தாய், மனைவியாய மூவரே! அவரே இயல்புடையார்! பிறர் பிறர் அயல்புடையர் என்க.
13. அயல்புடைய மூவர்
மூவரை ஆய்ந்து கொள்ள வைத்த வள்ளுவர், அயல்புடைய மூவர் இவர் என்பதைத் தாமே சுட்டியுள்ளார். ஆனால் பொருள் காணுதலில் 'அம்மூவர் எவர்' என்பது சிக்கற்பட்டுள்ளது. வள்ளுவர் வாய்மொழி தெளிவாகவே உள்ளது. மனம் போல் பொருள் காணலில் நேர்ந்துள்ள சிக்கல்களே அவை என்பது வெளிப் படுகின்றது.
66
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
என்பது இயல்புடைய மூவரைச் சுட்டும் குறள்.
இவண்,
துணை என்பதை எண்ணவேண்டும். இயல் புடைய மூவர்க்கு 'நல்லாற்றின் நின்ற துணை' என்றதையும் இவ்வயல்புடைய மூவர்க்கு வாளா துணை என்றதையும் எண்ணுதல் வேண்டும்,
துணை என்பதன் பொருள் என்ன? இரண்டு என்பதே பொருள். இரு பொருள் இணைவே துணை எனப்படும். 'துணையடி நீழல்' என்பதை எண்ணுக. ‘அஞ்சாமல் தனி வழியே போக வேண்டாம்' என்பதையும் ‘துணையோடல்லது நெடுவழி ஏகேல்' என்பதையும் இணைத்துக் காண்க.
துணை போன்றதே 'இணை' என்பதையும் ‘பிணை’, ‘புணை' என்பவையும் அவற்றின்வழி வந்தனவே என்பதையும் கருதிப் பார்க்க.
துணையுள் 'சொற்றுணை' என்பதொன்று. அதனை ‘நாத்துணை’ என்றும் கூறுவர். நாத்துணையாக இருக்கும் நங்கை 'நாத்துணையாள்' (நாத்தினாள்) என வழங்கப் பெறுவதும் அறிக. நாத்துணை நங்கையை இளங்கோ வடிகளார் ‘நாத்தூண் நங்கை' என்பார்.
வ
இனி வழித்துணை, 6 மனத்துணை, துயர்த்துணை, வாழ்க்கைத்துணை என்னும் துணைகள் எல்லாம் வெளிப்படையே.