8
M. amiluka (அமிழுக).
வேர்ச்சொற் கட்டுரைகள்
அமிழ் - ஆழ் - ஆழம் ஆழ்-ஆழி.
அமிழ்- அமிழ்த்து- ஆழ்த்து - M. amilttuka (அமிழ்த்துக).
ஆழ்- அழுந்து - அழுத்து அழுத்தம்.
அழுத்து- அழுத்தி.
அம் - அமை
அமைதல் =(1a) நெருங்குதல், கூடுதல்.
ம- வ, போலி. அமை- அவை = கூட்டம். கழகம்.
ஒ.நோ : அம்மை - அவ்வை, குமி- குவி.
அமை, அவை என்பன முதனிலைத் தொழிலாகுபெயர்.
இமை, சுவை என்பன முதனிலைத் தொழிலாகு பெயராயிருத்தலை நோக்குக.
அவை - அவையம்- பேரவை.
‘அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டு.
ஒ. நோ : மதி - மதியம் (முழுமதி), நிலை- நிலையம், விளக்கு-
விளக்கம்.
அவை- சவை- sabha (S).
ஒ.நோ: இளை- சிளை, ஏமம் - சேமம்.
“அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்”
(925)
“அவையடக் கியலே அரில்தபத் தெரியின்”
(1370)
என்று தொல்காப்பியத்திலும்,
"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து”
என்று தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலும், அவை, அவையம் என்னும் இருவடிவுச் சொற்களும் வந்திருத்தல் காண்க.
குறிப்பு : இக் கட்டுரையில் ‘அம்முதல்' என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு க, உ என்னுந் தமிழ் எண்களும், 'அமைதல்' என்ற சொல்லுக்குரிய பொருளுக்கு வளைவுக் குறிக்குள்() எண்களும், ‘அமர்தல்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்குக் குறியில்லாத எண்களும், ‘அம்’ என்ற சொல்லுக்குரிய பொருளுக்குப் பகரக் ழு 2 குறிக்குள் எண்களும் தெரியும் பொருட்டுக்
கொடுக்கப்பெற்றிருக்கின்றன.
தொடர்பு