மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் 3.பாவலர்
உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த
விரைவுடையார்சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி
மும்மணிக் கோவை முறை.
4. ஆராய்ச்சியாளர்
நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார்
பாலையும் முல்லையும் பார்.
5. மும்மொழிப் புலவர்
மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை
கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன்
கண்டதும் கேட்டது மில்.
6. மொழிபெயர்ப்பாளர்
வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று
முடிகொள்ளுஞ் சாகுந் தலம்.
7. சொற்பொழிவாளர்
இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும்
நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப்
பகைவரு முண்ணாது பன்னாளும் வேட்கும்
வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு
8. எழுத்தாளர்
கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும்
படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும்
103