உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

65

பொன் : இந் நான்காம் தூணின் தென்பால் நிலவணிந்தார் (சந்திரசேகரர்) உள்ளார். தக்கன் வேள்வியில் பங்கு கொண்ட நிலவைத் தேய்த்துத் தலையில் முடித்துக் கொண்ட கதையை விளக்குவது இது.

கண்

புன்முறுவலுடன் விளங்கும் அப்பன் அருகே பூத்த மலராக விளங்கும் அம்மை இணைக்கு இணையான படைப்பு!

பொன் : இத் தூணின் மேல்பக்கம் இருப்பவர் காளைக் கருளியோர் (ரிஷபாந்திகர்).

கண்

காளையின் கழுத்து எங்கே இருக்கிறது! அதன் தலை தனியே எங்கே இருக்கிறது! அவ்வளவு வளைத்து அருமையாகப் பெருமான் அன்புக்கு உரியதாகித் திகழ்கிறது! இப்பெயர் இவர்க்கு ஏன் வந்தது?

பொன் : ஊழிமுடிவில் தானும் அழிந்துபட நேருமே என அறம் நினைத்தது. தான் அழியாதிருக்க விரும்பியது. அதற்கு வழியென்ன? அழியாப் பொருளை அடுப்பதே வழியென்று இறைவனிடம் சென்று தன்னைக் காளையூர் தியாக்கிக் கொண்டு அருள்புரிய வேண்டியது. பெருமான் அதனை ஏற்றுக்கொண்டு அருளினார்.

கண்

நல்லது! அரிதில் அரிதெனப் பெரியாரைப் பேணிக் கொண்டது.

பொன் : இவர் அரி அயன் அறியா அரனார் (இலிங்கோத்

பவர்).

கண் : அண்ணாமலையாரா?

பொன் : ஆம்! அரி அடிதேட, அயன் முடிதேட, இருவருக்கும் பிடிபடாமல் இருந்த பெருமான் இவர். இலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டுவரும் தோற்றம் இது. மேலே பார்; அன்ன ஊர்தியில் நான்முகன் உள்ளான்; கீழே பன்றியின் படலம் காட்சியளிக்கிறது. திருமால் கூப்பிய கையராய் நிற்பதைப் பார்.

கண்

பன்றி வீழ்ந்து கிடக்கும் நிலை கவிஞனின் எள்ளல் நகைச்சுவையைக் காட்டுகிறது.