உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம் 31

பொன் : இவன் சித்தன் என்பான். தன் வாளாசிரியனைப் பகைத்தது மட்டு மல்லாமல், அவன் மனைக்கும் கேடு சூழ்ந்த பாவி! அவன் செருக்கை ஒழிக்க இறைவனே வந்து இவன் அங்கத்தை

கண்

வாளாசிரியனாக

வெட்டினான்.

புரிகிறது! புரிகிறது! அங்கம் வெட்டிய திருவிளையாடல் காட்சியோ இது?

பொன் : ஆம். இந்தக் கடைசித் தூண் சைத்தூண். அடியும் முடியும் ஒன்றாய் இருக்க, இடையே பலவாய்ப் பிரிந்த அழகுத் தூண். முப்பட்டை, நாற்பட்டை, உருளை முதலாகப் பல வடிவத்தூண்கள்; ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தூண்கள்; உள்ளே மூன்று தூண்கள்! எப்பக்கமும் ஏழு வரிசை! ஏழிசை எழுப்பும் எழில் தூண்கள்!

கண்

"ஏழிசையாய் இசைப்பயனாய்" இறைவனைக் கண்ட இனிய தமிழ் மக்கள், இறைவனில் இசையையும், இசையினில் இறைவனையும் கண்டு, இறைவனை வடித்த கல்லிலேயே இசையையும் வடித்துக் காட்டி யுள்ள அருமை பெரிது! மிகப் பெரிது!

பொன் : அருமை பெரிதுதான்! நம்மவர் அருமை நம்மவர்க்கு என்று புலப்பட்டது? எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மவர் அருமையை அறிந்து போற்றிப் புகழும் அளவுக்கு, நம்மவர் எவர் உணர்ந்தார்? எவராவது வெளிநாட்டவர் பாராட்டிய பின்னர்த் தானே நம்மவர்கள் இறுக்கி மூடிய இமைகளை ஏதோ கொஞ்சம் திறந்து பார்க்கின்றனர்! இதோ பார்! நம் கண்ணெதிரே ஒரு கூட்டம் எப்படிக் கும்மியடித்துக் கொண்டு 'நானும் ஆயிரக்கால் மண்டபத்தைப் பார்த்தேன்' என்று பெயர் சொல்லிவிட்டுப் போகின்றது. இந்த வெள்ளைக்காரர் இருவரையும் பார். இவர்கள் இந்தத் தூணை விழித்தகண் மாறாமல் விழுங்குவதுபோல் பார்க்கின்றனர்! ஊடே உருளும் தூண் உண்டு என்பதைப் படித்துவிட்டு வந்து, அதை உருட்டிப் பார்க்கின்றனர். மெல்லென ஒலி எழுப்பக் கேட்டுச் சுவைக்கின்றனர். இத்தகைய தூண் இம் மண்டபத்தில் உண்டு என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?