உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

115

அதற்கு நேர் வடக்கே ஒரு கோபுரம் தோன்றுகிறது. பொன்: அது சொக்கர் கோயிலுக்கு மேற்கே, மேலக்கோபுரத் திற்கு நேர் கிழக்கேயுள்ள கோபுரம். ஐந்து நிலைகளை யுடைய அக் கோபுரம் 21.6 மீட்டர் உயரமானது. அதனை மல்லப்பன் என்பார் கட்டினார்.

கண்

ஊடே ஒரு கோபுரம் தெரிகிறதே! அது?

பொன் : நடுக்கட்டுக்கோபுரம் எனப்படும். கிளிக்கூட்டு மண்டபத்தில் இருந்து சொக்கர் கோயில் இரண்டாம் திருச்சுற்றுக்குச் செல்லும் வழியில் உள்ளது.

கண்

சிராமலைச் செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் கட்டப்பெற்றது. 20.7 மீட்டர் உயரமான அஃது ஐந்து நிலைகளையுடையது.

வடக்குக் கோபுரத்திற்குத் தெற்கே ஓர் ஐந்து நிலைக்கோபுரம் தோன்றுகின்றது.

பொன் : அது செவ்வந்தி வேலப்பச் செட்டியார் கட்டியது. 'இடபக் குறியிட்ட கோபுரம்' எனப்படும் அதன் மேல்நிலைக் கல்லில் இடபக்குறி டபக்குறி உள்ளது. அதன் உயரம் 21.3 மீட்டர்.

கண்

காஞ்சிமா நகரை ஆட்சி செய்த காடு வெட்டிய சோழனுக்கு இறைவன் வடக்கு மதிலின் வாயிலைத் திறந்து தம்மையும் அம்மையையும் வழிபடச் செய்து அனுப்பிவிட்டு, மீன் முத்திரை வைத்திருந்த இடத்தில் இடப முத்திரை வைத்ததாகத் திருவிளையாடல் கூறுகிறதே அதுவா?

பொன் : ஆம்! விடை இலச்சினை இட்ட திருவிளையாடல் பற்றிய செய்திதான் அது. சொக்கர் கோயிலுக்கு முன்னே இரண்டு கோபுரங்கள் தெரிகின்றனவே, அவற்றுள் மேற்கேயுள்ளது கம்பத்தடி மண்டபத்தில் இருந்து சொக்கர் கோயிலுக்குள் போகும் வாயிலில் உள்ளது. மூன்று நிலைகளையுடைய அக் கோபுரம் குலசேகர பாண்டியனால் கட்டப்பெற்றது.அதன் உயரம் 12.3 மீட்டர். அதற்குக் கிழக்கே தெரிவது கம்பத்தடி மண்டபத்திற்குச் செல்லும் வழியில் உள்ளது. வசுவப்பன் என்பவரால் கட்டப்பெற்ற அவ் வைந்து நிலைக் கோபுரம் 19.8 மீட்டர் உயரமானது.