உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

ஆம்! வலக்கைப் பக்கம் மூன்று; இடக்கைப்பக்கம் மூன்று; ஆறு குட்டிகளை எடுத்து மார்பில் பாலருந்த விட்டுள்ளார். ண்டு கால்களுக்கும் ஊடே இரண்டு குட்டி; காலுக்குத் தெற்கே இரண்டு, வடக்கே இரண்டும் ஆக ஆறு குட்டிகள்! மொத்தம் பன்னிரண்டு.

பொன் : சுகலன் என்பான் மக்கள் பன்னிருவர்; அவர்கள் தேவகுருவின் வசைமொழிக்கு ஆளாகிப் பன்றிக் குட்டியாகினர். பன்றிக்குட்டிகள் தாயின்றித் தவித்தன; அவற்றுக்குத் தாயும் ஆயினான் இறைவன்! அக் குட்டிகளை ஊட்டி வளர்த்தான். பின்னே அவற்றை அறிவாற் சிறந்தவராக்கிப் பன்றிமுக மானிடராய்ப் பன்றிமலையில் வாழச் செய்தான். கீழே பன்றிமுக மனிதர்கள் கும்பிட்டுக்கொண்டு நிற்பது தெரிகிறதா?

கண்

இதன் வடக்குப் பக்கம் ஒரு வீரன் அம்புகொடுத்து ஒரு பன்றியைக் கொல்கிறானே! அம்பு பன்றியை எடுருவும் சிற்பம் உள்ளதே?

பொன் : ஆம். அதுதான் தாய்ப்பன்றி; அம்பு ஏவுபவன் இராசராச பாண்டியன் என்பான். இது திருவிளை யாடலில் வரும் 'பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்த படலச்' செய்தி.

கண்

இறைவன், எவ்வுயிருக்கும் உயிரானவன்! எவ்வுயி ருக்கும் அருள் சுரப்பவன்; அவன் முன்னர், வலியது மெலியது இல்லை! உயர்ந்தது தாழ்ந்தது இல்லை! ஒப்ப நாடி அத்தக அருள்பவன் அவன்; அத் தகையவன், கடையனினும் கடைப்பட்டவன் எனினும் தனக்கும் அருள் புரிவான் என்னும் நம்பிக்கையை ஊட்டுதற்காக வைக்கப்பெற்ற வழிக்காட்சிகள் இவை. பொன் : வாயில்

தூண்களுக்கு இப்பாலும் அப்பாலும் தெற்கிலும் வடக்கிலும் இருப்பவை ஓர் ஒப்புமை யுடையவை; பொதுவாகக் கலையே ஓர் ஒழுங்கு முறையைத் தனக்கென ஊடகமாகக் கொண்டு உயர்ந்து ஓங்குவதுதானே!