உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

149

இறைவனை வணங்கி மீண்டும் தேவ மீண்டும் தேவ யானையாகி விண்ணுலகம் சென்றது.

3. திருநகரங் கண்டது

மணவூர்'

ஒரு காலத்தில் பாண்டியரின் தலைநகர் என்பதாக இருந்தது. அவ்வூரில் இருந்த 'தனஞ்செயன்' என்னும் வணிகன் வணிகத்திற்காகச் சென்று கடம்பவனத்தின் வழியே வந்தான். இரவாகிவிட்டது.

அப்பொழுது விண்ணில் இருந்து பேரொளியுடன் ஒரு விமானம் இறங்கிக் கடம்பவனத்திற்கு வந்ததைத் தனஞ்செயன் கண்டான். அதிலிருந்த சிவலிங்கத்தை வணங்கினான். அவ்விமானத்தில் வந்த தேவர்கள் அச் சிவலிங்கத்தை நான்கு யாமங்களிலும் வணங்கிச் செல்வதைக் கண்டான். காலையில் விமானத்தையும் சிவலிங்கத்தையும் மட்டுமே அங்குக் கண்ட தனஞ்செயன், அவ் வியப்பான நிகழ்ச்சியைத் தன் அரசன் பாண்டியனுக்குச் சொன்னான். அப் பாண்டியன் பெயர் குலசேகரன் என்பது. அவன் அச்செய்தியைக் கேட்ட அன்று உறங்கும்போது இறைவன் கனவில் தோன்றிப் "பாண்டியா, கடம்பவனத்தை அழித்துத் திருத்தி நகருண்டாக்குக" என்றான். அப்படியே கடம்பவனம் சென்ற பாண்டியன் அதனைத் திருத்தி நகராக்கினான். இறைவன் சடையில் இருந்து அமுதத்தைப் பொழிந்ததைக் கண்டு அதற்கு மதுரை எனப் பெயரிட்டான் பாண்டியன்.

4. தடாதகைப் பிராட்டியார் திருப்பிறப்பு

மலயத்துவச பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி சோழன் மகளாகிய காஞ்சனை என்பவள். அவர்களுக்கு நெடுநாளாக மக்கட்பேறு வாய்க்கவில்லை. அதனால் பாண்டியன் 'குதிரை வேள்விகள்' செய்தான்.அவ் வேள்விகள் 99 ஆயின. 100 முடிந்தால் அவன் இந்திரப் பதவி பெற்று விடுவான் என அஞ்சிய இந்திரன் வந்து "மக்கட்பேற்று வேள்வி' செய்தால் குழந்தை பிறக்கும் என்றான். அப்படியே பாண்டியன் மக்கட்பேற்று வேள்வி செய்தான்.

அவ்வேள்வி நிகழ்ந்தபோது, அவ்வேள்வித் தீயில் இருந்து ஒரு குழந்தை தோன்றிக் காஞ்சன மாலையின் மடியில் அமர்ந்தது. அக்குழந்தைக்கு மூன்று மார்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தான் பாண்டியன். ஆண்குழந்தை வேண்டுமென்று வேள்வி செய்யப் பெண்குழந்தை பிறந்தவுடன்