உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

54.கீரனுக்கு இலக்கணம் உபதேசித்தது

"நெற்றிக்கண் நெருப்புக்கு ஆற்றாத காமன் எரிந்து பட்டான். என்னை எரிந்துபடாமல் இத் தாமரைக்குளமே காத்தது" என்னும் எண்ணத்தால் முப்பொழுதும் அதிலே நீராடி முழுமுதலைத் தொழுது வந்தான் நக்கீரன். அதற்கு மகிழ்ந்த இறைவன், "இவன் இலக்கணம் இன்னும் தெளிவாய் அறிந்திலன்; இவனுக்கு எவரால் இலக்கணம் அறிவிப்பேன்" என்று நினைக்கும் அளவில், “அகத்தியனே இலக்கணம் உணர்த்தத் தக்கான்” என உமையம்மை எடுத்துக் கூற, அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன், அகத்தியனை நினைத்தான். அவன் எய்தினான். வழக்கம்போல் வழிபாட்டுக்குக் கீரனும் வந்தான். அப்பொழுது இறைவன் அகத்தியனிடம், "எம்மிடம் நீ தெரிந்து கொண்ட இலக்கணத்தை இவற்குக் கூறுக" எனப் பணித்தான். அவ்வாறே அகத்தியன் கீரனுக்கு இலக்கணக் கூறுகளையெல்லாம் அருளி விடை பெற்றுக் கொண்டு சென்றான். உமையம்மை இறைவனிடம், 'நீவிர் உணர்த்தாது அகத்தியனைக் கொண்டு இலக்கணம் உணர்த்தியது என்னை?" என வினவ, "பொறாமையாளனுக்கு நூல் உணர்த்தக் கூடாதெனல் நூல்முறை, ஆதலால் அவ்வியல் புடைய கீரனுக்கு நாம் உணர்த்தாது அகத்தியரைக் கொண்டு உணர்த்தினோம் என்றான் இறைவன். மகவின் நோய்க்குத் தாய் மருந்து தந்து ஆற்றுவது போல் இறைவன் அருளினான் என கீரன் மகிழ்ந்து இறைவனால் செய்யப்பட்ட நூலை எவரும் அறிய விளக்கிக் கூறி இருந்தான்.

55. சங்கத்தார் கலகம் தீர்த்தது

சங்கப்புலவர்கள் நாற்பத்து எண்மரும் தனித்தனியே நூலியற்றித் தத்தம் நூலின் பெருமை கூறித் தம்முள் மாறு கொண்டு இருந்தனர். பின்னர்த் திருக்கோயில் சென்று, "எம் பாடல்களின் தரத்தை நடுவுநிலையாய் ஆய்ந்து கூறவல்ல அறிஞன் ஒருவனை அருள்க" என வேண்டினர். இறைவன் ஒரு புலவன் வடிவில் தோன்றி, "இந் நகருள் தனபதி என்னும் வணிகன் உள்ளான். அவன் மகன் ஊமன்; நுங்கள் பாடல் கேட்டுத் தலையசைத்தல் மயிர்சிலிர்த்தல் முதலியவற்றால் பாடற் சிறப்பினை உணர்த்துவான்" என்றருளினான். அவ்வாறே அவனை அழைத்து அவன்முன்னே தம் பாடல்களைக் கூறினர். அவன் நக்கீரன், கபிலன், பரணன் ஆகியோர் தமிழைக் கேட்டுச் சொற்றோறும் தலையசைத்தான். மெய்மயிர் பொடித்தான். களிப்பின் எல்லை காட்டினான். பொன்னும் பவழமும் முத்தும்