மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
245
தமிழ்கற்க விரும்புவாரைத் தேடித் தேடிக் கல்லூரியில் சேர்த்தனர். அவர்களுக்கு உண்டியும் உடையும் வழங்கினர்; உறைவிடமும் தந்தனர்; வேண்டும் பயன் பொருள்களும்,
நூல்களும் பரிந்து உதவினர். "ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோ ரும்உண்டு கொல்' என ஈராயிரம் ஆண்டுகளின் முன்னே மதுரை நகர்த் தெருக்களில் வினாவிய வினாவுக்கு உண்டு என இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தே மெய்ப்பித்துக் காட்டிய செய்தி இது! இதன் அருமையை எண்ணுந்தோறும், எண்ணத்தால் சிறந்த அப்பெருமக்களின் சிறப்பு விண்ணேறிப் பறக்கவே செய்கின்றது!
மாணவர்கள் போற்றப் பெற்ற வகைதான் இப்படி என்றால் ஆசிரியர்கள் எப்படிப் போற்றப் பெற்றனர்? திரு. நாராயண ஐயங்கார் 'தம் இல்'லில் இருந்து தமிழ்ப்பணி செய்ய வேண்டும் எனத் தமிழ்ப்பாண்டித்துரை எண்ணினார். அதனால் 5000 ரூபாவழங்கி, வீடுகட்டிக் கொள்ள கொள்ள வேண்டினார். நாராயணரோ, ஈராயிரத்து ஐந்நூறு ரூபாயில் குடியிருப்பு அமைத்துக் கொண்டார். 'இவ்வளவு போதும்' என்னும் காலநிலை அது! எஞ்சியதைப் பாண்டித்துரையாரிடம் தந்தார் அப்பெரியவர்! இப்பெரியவர், என்ன செய்தார்? 'தம்இல்' இருக்கும் அப்பெரியவர். தமதுபாத் துண்ணச் சய்ய விழைந்தார். அதனால் விளைநிலம் வாங்கிக் கொள்ள ஏவினார்! புலவளத்தால் சிறந்த நாராயணர், நிலவளத்தாலும் சிறந்தார். இவர்க்கு மட்டும்தானோ இவ்வுதவி செய்தார் தேவர்?
'நோய்முற்றி வயிற்றினுள் நாபியின் கீழ்க் கழலையொப்பத் திரண்டு இருமலமும் வெளிப்படாவண்ணம் தடுத்து ஆவிபோக்க முயன்றது. அக்காலைப் பல சுதேச மருத்து வரிடத்தும் பல ஆங்கில மருத்துவரிடத்தும் சென்று பிணிதீர்த்துக் காத்தல் வேண்டுமெனப் பெரிதும் வேண்டினேன். அவரெல்லாரும் அந்நோய் கருவிகொண்டு சோதிக்கற் பாற்று என்றும், அதுவும் முற்றியபடியான் இனிச் செய்யின் உயிர்க்கேடு செய்யும் என்றும் சொல்லினர். பின்னர்ப் பிறநாடு சென்றாயினும் பிணிதீர்ப்பான் கருதி, யான் அக்காலைச் சேதுபதி கலாசாலையிற் கற்பிக்கும் தொழில் பெற்றிருந் தமையால், மதுரைத் தமிழ்ச் சங்கத்து அக்கிராசனாதிபதியும் பாலவனத்தம் ஜமீந்தாரும் உத்தம குணமேருவும் வறியார்க் கொன்றீவதே ஈகையெனக் கொண்ட பெருவள்ளலுமாகிய மகா-ள-ள-ஸ்ரீ பாண்டித்துரைத் தேவரவர்களைக் கண்டு