உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -7

சமயங்கள் தொடர்பான ஆய்வுகள்பெரிதும் உதவும் என்பதை உணர்ந்தே இவ்வகையான ஆய்வுகளைச் செய்துள்ளார். தமிழ்ச சமூகத்தில் சைவம், வைணவம் ஆகியவை குறித்த உரையாடல்கள் மிக விரிவாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் சமணம், பௌத்தம் தொடர் பான உரையாடல்களை முன்னெடுத்த மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் அணுகுமுறையை நாம் விதந்து பாராட்ட வேண்டும். இதன்மூலம் தான் தமிழ்ச்சமூகத்தில் பரவலாகச் சமணம், பௌத்தம் தொடர்பான செய்திகளைத் தமிழ் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்நூலை தான் எதற்காக உருவாக்கினேன் என்பது குறித்து அவர் சொல்லும் விளக்கம் முக்கியமானது. சைவசமயம் செல்வாக்கு பெற்ற சூழலில் சமண சமயம் எதிர்நிலையில் விமர்சனம் செய்யப்பட்டதை நாம் அறிவோம். அவ்வகையில் செய்யப்பட்ட விமர்சனங்கள் சரியா என்ற விவாதத்தை மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் முன் வைக்கிறார்.

தமிழ் இலக்கணங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவற்றை மிக அதிகமாக உருவாக்கியவர்கள் சமண சமயத்தவர்களே ஆவர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள் ஆகிய பிற நூல்களை உருவாக்கிய சமணர்கள் ஏன் தமிழ்ச் சமூகத்தின் பொது வெளியில் இருந்து முற்று முழுதுமாக வெளியேற்றப் பட்டார்கள் என்ற கேள்விக்கு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் விரிவான பதிலைத் தந்துள்ளார்கள். மேலும் இயற்கை மரபுகளைப்பேசிய சங்க இலக்கியத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகச் சமண பெளத்த சமயங்களைக் கருதமுடியும். இச்சமயங்கள் கடவுள் மறுப்பை அடிப்படையாகக் கொண்டவை. மனித வாழ்வை முதன்மைப் படுத்துபவை. இத்தன்மைகள் பிற்காலத்தில் இச்சமயங் களிலே மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன என்றாலும் தொடக்கக்காலத்தில் இச்சமயங்கள் மனிதனை முதன்மைப் படுத்தியவை என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. நாத்திக மரபை முதன்மைப்படுத்தும் தமிழ் இயற்கைநெறி மரபு மற்றும்பிற்காலத்தில் உருவான சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் செல்வாக்குக்குட் பட்ட மயிலை சீனி