உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

1. ஆறுவகையான உயிர்கள்

சமண சமயத்தில் உயிர்களின் வகை ஆறு வகையாகக் கூறப் படுவது போலவே, தொல்காப்பியரும் ஆறுவகையான உயிர்களைக் கூறுகிறார். தொல்காப்பியம் பொருளதிகாரம், செய்யுளியலில், தொல் காப்பியர் ஓதிய சூத்திரங்களும் அவற்றிற்கு இளம்பூரணர் என்னும் சமண சமய உரையாசிரியர் எழுதிய உரையும் கீழே தரப்படுகின்றன. "ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே

66

இரண்டறி வதுவே யதனொடு நாவே மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே ஆறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

என்னுதலிற்றோ வெனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று.

ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினானும், வாயினானும், அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், அறிவது; நாலறிவுயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், அறிவது; ஐயறிவுயிராவது உடம்பி னானும், வாயினானும், மூக்கினானும், கண்ணினானும், செவியினானும், அறிவது. ஆறறிவுயிராவது உடம்பினானும், வாயினானும், மூக்கி னானும், கண்ணினானும், செவியினானும், மனத்தினானும், அறிவது; இவ்வகையினான் உயிர் ஆறுவகையினானாயின.

இவ்வாறு அறிதலாவது:

உடம்பினால் வெப்பம், தட்பம், வன்மை, மென்மை, அறியும். நாவினால் கைப்பு, காழ்ப்பு,துவர்ப்பு, உவர்ப்பு, புளிப்பு, மதுரம் என்பன அறிவும். மூக்கினால் நன்னாற்றம், தீயநாற்றம் அறியும். கண்ணினால்