உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

25

அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி 37 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகிறது.

கடைச்சங்கத்தை நடத்திய பாண்டியர் 49 பேர் என்றும், அவர்கள் 1850 ஆண்டு சங்கம் நடத்தினர் என்றும் கூறப்படுகின்றனர். அதாவது ஒவ்வொரு பாண்டியனும் சராசரி 37 ஆண்டு அரசாண்டான் என்பது தெரிகின்றது.

சரித்திரநூல் அறிஞர்கள், ஒரு அரசனுடைய ஆட்சிக் காலத்தைச் சராசரி 20 அல்லது 25 ஆண்டு என்று வரையறுத்துக் கணித்து வருகிறார்கள். இறையனார் அகப்பொருள் பாயிரக் கணக்குப் படிப் பார்த்தால், கடைச்சங்க காலப் பாண்டியரின் சராசரி ஆட்சி யாண்டு 37 ஆண்டு ஆகவும், இடைச்சங்கப் பாண்டியரின் சராசரி ஆட்சியாண்டு 62 ஆண்டாகவும், தலைச்சங்கப் பாண்டியரின் சராசரி ஆட்சியாண்டு 50 ண்டாகவும் அமைகின்றன. இந்த ஆண்டுகள், சரித்திர ஆராய்ச்சி முறைக்கு ஒவ்வாமல் அதிகப்படியாகக் காணப் படுகின்றன.

கால அளவு அதிகமாகக் கூறப்படுவதனாலேயே சங்கங்கள் இருந்தன என்பதை ஐயப்படவேண்டியது இல்லை. அதிகக் கால அளவு கூறுவது நமது நாட்டில் மட்டும் அன்று, வேறு நாடுகளிலும் அரசர்களின் ஆட்சிக் காலத்தை அதிகப்படுத்திக்கூறும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது. சிறிய ஆசியா (Asia Minor) தேசத்திலே தைகிரிஸ் யூபிரெயிட்டிஸ் ஆறுகள் பாய்கிற இடத்திலே பழைய காலத்தில் பாபிலோனியா நாடு இருந்தது. அது பாரசீகக் குடாக்கடலில், மேற்படி தைகிரிஸ் யூபெரிடிஸ் ஆறுகள் கடலில் விழுகிற இடத்தில் இருந்தது. அந்த பாபிலோனியாவுக்கு வடக்கே அசிரியா நாடு இருந்தது. (பாபிலோனியாவுக்கு சுமேரியா என்பதும் பெயர். அசிரியாவுக்கு அக்காடு என்பதும் பெயர்).

சுமேரியரும் அக்காடியரும் ஒருவரை ஒருவர் வென்று நெடுங் காலம் அரசாண்டார்கள். அந்த அரசர்களின் பட்டியல் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. களிமண் பலகைகளில் அவர்கள் எழுதி வைத்த கூனி பார்ம் (ஆப்பு வடிவ) எழுத்துச்சுவடிகளை (பூமியில் புதைந்து கிடந்தவை) மேல் நாட்டுப் புதைபொருள் ஆராய்ச்சிக் காரர்கள் அகழ்ந்தெடுத்து அச்சுவடிகளைப் படித்தறிந்தார்கள். அச் சுவடிகளில் அந்த நாட்டை ஆண்ட அரசர் பரம்பரை கூறப்படுகிறது. அதிலே, வெள்ளப்பிரளயத்துக்கு முறபட்ட எட்டு அரசர்களின்