உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

29

சங்ககாலப் பாண்டிய மன்னரின் பட்டியலும், கால அளவைப் பொறுத்த மட்டிலும், ஒரேமாதிரி அமைந்திருப்பதும் இங்குக் கருதத் தக்கன. சுமேரிய அரசரின் ஆட்சிக்காலம், நம்ப முடியாத அளவு கால எல்லை அதிகப்படியாகக் கூறியுள்ளது போலவே, தமிழ்ச் சங்கங்களில் கூறப்படுகிற பாண்டிய அரசர்களின் ஆட்சிக்கால எல்லையும் அதிகப்படியாகவே கூறப்படுகின்றன. இதிலும் இரண்டு நாட்டுக்கும் ஒரு பொருத்தம் காணப்படுகிறது.

நமது பாரத தேசத்தில் உள்ள பழைய கலிங்க நாடு இக்காலத்தில் ஒரிசா நாடு என்றும் ஒட்டர தேசம் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. (சோழன் இந்நாட்டை வென்றதுபற்றிக் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் ஒன்று உண்டு.) ஒரிசா அல்லது ஒரியா மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்; திராவிடப் பண்பாடுடையவர்கள். ஒரிசா நாட்டில் உள்ள பேர் பெற்ற பூரிஜகனாதர் ஆலயத்தில், அந்நாட்டை அரசாண்ட பழைய மன்னர்களின் பட்டியல் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியலில், அம்மன்னர்களுக்கு நீண்டகால ஆட்சி கூறப்பட்டுள்ளது. அப்பட்டியலைக் கீழே தருகிறேன்:

1. சங்கரதேவர். ஆட்சிக் காலம் 400 ஆண்டு. கி.மு. 1807 முதல் 1407 வரையில் அரசாண்டார்.

2. மகேந்திரதேவர். ஆட்சிக் காலம் 215 ஆண்டு. கி.மு. 1037 முதல் 822 வரை அரசாண்டார்.

3. இஷ்டதேவர். ஆட்சிக் காலம் 134 ஆண்டு. கி.மு. 688 முதல் 538 வரை அரசாண்டார்.

4. பஜ்ரதேவர். ஆட்சிக் காலம் 117 ஆண்டு. கி.மு. 538 முதல்

421 வரை.

5. நரசிங்கதேவர். ஆட்சிக் காலம் 115 ஆண்டு. கி.மு. 426 முதல்

306 வரை.

6. மன்கிருஷ்ணதேவர். ஆட்சிக்காலம் 122 ஆண்டு. கி.மு. 306 முதல் 144 வரை.

7. போஜ்தேவர். ஆட்சிக் காலம் 127 ஆண்டு. கி.மு. 184 முதல்

57 வரை.