உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

6

203

சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படு கிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங் களாகும். இரண்டும் ஒன்றே.

இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர் களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகிறது. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங் களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.

“அப்பணி செஞ்சடை யாதிபு ராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறி வாரே’

என்பது திருமூலர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? “முப்புரமாவது மும்மல காரியம்" என்று கூறிய திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையும் கூறுகிறார்:

66

'வானவர் தம்மைவலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரம் செற்ற தலைவன்

99

என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?

முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள்போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்றிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல் லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக் கதைகளில் திரிபுரம் என்று கூறினர் என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்து விடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்