உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் சமணம்

-

235

சைவருடைய சிவபெருமான் வைதீகருடைய உருத்திர னுடன் பொருந்தி இணைத்துக் கூறப்பட்டார். சிவபெருமானு டைய அருட் சக்தியாகிய அம்மனுடன் (தேவியுடன்) மலையரசனாகிய இமவானின் மகளாகிய உமையைப் பொருத்தினார்கள். பிறகு சிவனுக்கும் உமைக்கும் பிறந்த பிள்ளை சண்முகன் (ஆறுமுகன்) என்று கற்பித்தார்கள். பின்னர், ஆறுமுகனும் தமிழருடைய முருகனும் ஒருவரே என்று கற்பித்தனர். முருகனுக்கு வள்ளி என்னும் தமிழ் மனைவி இருக்கவும், அதனோடு திருப்தியடையாமல், ஆரிய திராவிட உறவைப் பலப்படுத்தும் பொருட்டு முருகனுக்குத் தேவயானி

என்னும் ஆரியப் பெண்ணை மனைவியாகக் கற்பித்துக் கொண்டார்கள். அக்காலத்தில் பிள்ளையார் (கணபதி) வணக்கம் தமிழ் நாட்டில் ஏற்படவில்லை. பிற்காலத்தில் பிள்ளையார் வணக்கம் ஏற்பட்ட பிறகு, அவரையும் சிவபெருமானுடைய மகன் என்று இணைத்து விட்டார்கள். தமிழருடைய திருமால் என்னும் பெருமாளுடன் விஷ்ணு என்னும் வதீக தெய்வத்தைப் பொருத்தி விட்டார்கள். விஷ்ணுவையும் திருமாலையும் ஒன்றாக்கிய பிறகு, கிருஷ்ணன், பலராமன், இராமன் முதலியவர்களையும் விஷ்ணுவுடன் இணைத்து இவர்கள் அவருடைய அவதாரங்கள் என்று கற்பித்து விட்டார்கள். இவ்வாறு திராவிடத் தெய்வங்களுடன் ஆரியத் தெய்வங்கள் பொருத்தப்பட்டு இரண்டும் ஒரே மதத் தெய்வங்கள் என்று சொல்லப்பட்டன. இந்தத் திராவிட ஆரிய உறவைத்தான் பிற்காலத்தில் வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் கூறியுள்ளனர்.

66

'புரையாய்க் கனமாய்த் தாழ்வானைப்

புதியனவுமாய் மிகவும் பழையான் தன்னை

என்றும்,

66

'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

அண்ணாமலை யுறையும் அண்ணல் கண்டாய்”

என்றும்,

"மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்"

என்றும்,

"செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை

وو