உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

பெரிதும் மனங் கவன்றார்கள். பிறகு ஐயை கோவலன் கண்ணகியர் தங்கள் வீட்டில் தங்கி உணவு சமைத்து உண்டதையும் தான் அவர் களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்ததையும் கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து கண்ணகி புலம்பி அழுததையும் நகரமக்கள் திரண்டதையும் கண்ணகி வழக்குரைத்துக் கோவலன் சிலம்பைக் களவாடவில்லை. அந்தச் சிலம்பு தன்னுடையது என்பதை நிலைநாட்டியதையும் பிறகு நகர மக்கள் சீற்றங் கொண்டு அரண்மனைக்குத் தீயிட்டுக் கொளுத்தி யதையும் எல்லாம் இவர்களுக்குக் கூறினாள். இவைகளை யெல்லாம் கேட்ட சோழ நாட்டுப் பெண்மணிகள் மூவரும் மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்கள்.

ஐயை, தானும் கண்ணகியின் பத்தினிக் கோட்டத்தைக் காண இவர்களுடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள். கண்ணகியுடன் பழகியிருந்த இந்த நான்கு பெண்மணிகளும் மதுரையிலிருந்து புறப்பட்டு நெடுக வழி நடந்து வஞ்சிமா நகரத்துக்கு வந்து பத்தினிக் கோட்டத்தை யடைந்தனர்.

இந்தச் செய்திகளையெல்லாம் காவியப் புலவரான இளங்கோ அடிகள் சிலப்பதிகார வாழ்த்துக் காதையில் சுருக்கமாகக் கூறியுள்ளார். இச்செய்திகளை உரைப்பாட்டாக (வசனச் செய்யுளாக) அமைத் துள்ளார். அவ்வுரைப் பாட்டின் ஒருபகுதி இது:

"கோவலன்தன் வினையுருத்துக் குறுமகனாற் கொலையுண்ணக் காவலன்தன் இடஞ்சென்ற கண்ணகிதன் கண்ணீர் கண்டு மண்ணரசர் பெருந்தோன்றல் உண்ணீரற்று உயிரிழந்தமை மாமறையோன் வாய் கேட்டு மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனப் பெருந்துன்பமெய்திக் காவற்பெண்டும் அடித்தோழியுங் கடவுட் சாத்தன் உடனுறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டுமென்று மதுரை மாநகர்புகுந்து முதிரா முலைப்பூசல் கேட்டாங் கடைக்கலமிழந் துயிர் இழந்த இடைக்குல மகள் இடமெய்தி ஐயை யவள் மகளோடும் வையையொரு வழிக்கொண்டு மாமலைமிசை ஏறிக் கோமகள் தன் கோயில்புக்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டு வற்குத் திறமுரைப்பர்மன்.'

புதிதாக அமைக்கப்பட்ட பத்தினிக் கோட்டத்தில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்தது. அரசன் செய்த விழா அல்லவா? அந்த