உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வேண்டியிருந்த கடமையும் பொறுப்பும் முடிந்துவிட்டன. அதற்குப் பிறகு அவள் உயிர்வாழ விரும்பவில்லை. கண்ணுக்குக் கண்ணான கணவன், உயிருக்கு உயிரான காதலன் மறைந்துபோன பிறகு அவளுக்கு உலகத்திலே என்ன இருக்கிறது? உலகத்தில் உயிர் வாழ அவள் விரும்பவில்லை. அவள் தந்தை மாசாத்துவனுடைய பெருஞ் செல்வம் ஒரே மகளான அவளுக்கேயுரியது. மாமனாரான மாநாய்கனுடைய அளவற்ற செல்வமும அவளுக்கே உரியது.. ஆனால் கோவலன் இல்லாத போது இச்செல்வம் அவளுக்கு ஏன்? அவள் உயிரைவிட்டு விடத்தீர்மானித்தாள். உணவும் உறக்கமும் கொள்ளாமல் எங்கும் தங்காமல் இரவும் பகலும் நெடுக நடந்தாள். எங்குச்செல்ல வேண்டும் என்னும் குறிக்கோளில்லாமல் பல நாள் காட்டிலும் மேட்டிலும் நெடுக நடந்தாள். பதினான்காம் நாள் ஒரு குன்றின் மேலே ஒரு வேங்கை மரத்தின் கீழே வந்து நிற்க அங்கு அவளுடைய உயிர் உடலை விட்டு பிரிந்தது.

பத்தினிக்


இந்தப் பத்தினிப் பெண்டின் வரலாற்றைக் சேரன் செங்குட்டுவ னின் இராணியாகிய சேரமாதேவி இந்தப் பத்தினியைப் போற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதைச் செங்குட்டுவன் அந்த விழாவைக் அவளுடன் நெருங்கிப் பழகிய பெண்மணிகள் நால்வர் இருந்தனர். அவர்களும் பத்தினிக் கோட்டம் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்தப் பெண் மணிகள் கோவலன் கண்ணகியரின் உறவினர் அல்லர். கோவலனின் தாயும் கண்ணகியின் தாயும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் அயல் நாட்டிலே நேரிட்ட துனபங்களையும் கடைசியில் அவர்கள் இறந்து போனதையும் கேட்டு தீராத்துயரடைந்து மனவேதனையினால் முன்னமே இறந்து போனார்கள். கோவலன் தந்தையாகிய மாநாய்கன் தன் குடும்பத்துக்கு நேர்ந்த துன்பங்களையும் துயரங்களையும் கண்டு மனம் வெறுத்துத் தன்னுடைய பெருஞ் செல்வத்தையெல்லாம் தான தருமம் செய்துவிட்டுப் பௌத்தமதம் பிக்ஷ ஆனான். கண்ணகியின் தந்தையாகிய மாசாத்துவனும் அவ்வாறே மனம் வெறுத்துத் தன்னுடைய செல்வங்களையெல்லாம் தானம் செய்து விட்டு

ஆசீவகமதத் துறவியாய் விட்டான். ஆகவே கோவலன்

கண்ணகியரின் உறவினர் யாரும் பத்தினிக் கோட்டத்துக்கு வரவில்லை. அப்படியானால், பத்தினிக் கோட்டத்துக்கு வந்த இந்த நான்கு பெண் மணிகள் யாவர்?