உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

இதே கருத்தை வையாபுரிப்பிள்ளையவர்கள் தாம் ஆங்கிலத் தில் எழுதிய தமிழ் மொழி, இலக்கிய வரலாறு என்னும் நூலிலும் எழுதி யுள்ளார். (History of Tamil Language and Literature Page 146)

திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியும் தமது 'சிலப்பதிகார மணி மேகலை - கால ஆராய்ச்சி’ என்னும் ஆங்கிலக் கட்டுரையிலே, வையாபுரிப்பிள்ளை கூறிய கருத்தையே கூறுகிறார்:

"Again Narrinai contains a short poem (216) which mentions a woman Tirumavunni who after pining for husband's coldness to her tore off and cast away one of her breasts and stood beneath a vengai tree - incidents with a strong resemblance to the main traits of the Kannaki saga.” (Page 25 University of Ceylon Review Vol. VII-1949)

பின்னத்தூர் நாராயணசாமி அய்யரும், மு. இராகவையங்காரும், திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவரே என்று கருதினர். வையா புரிப்பிள்ளையும், நீலகண்ட சாஸ்திரியும், திருமாவுண்ணியின் கதை ஒரு பழைய கதை என்றும், அப் பழைய கதையிலிருந்து கண்ணகி யின் கதை தோன்றிய தென்றும் கூறினர். இவர்களை இவ்வாறு கருதச் செய்தவை இரண்டு செய்திகள். அவை: திருமாவுண்ணியும் கண்ணகி யும் வேங்கை மரத்தின் அடியில் இருந்தனர் என்பது ஒன்று; திருமா வுண்ணியும் கண்ணகியும் ஒரு முலை குறைத்தனர் என்பது மற்றொன்று. இந்த இரண்டு பொருத்தங்களாக கொண்டு இவ் விரண்டு பெண் மணிகளும் ஒருவரே என்று இவ்வறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்போக்காகப் பார்க்கிறவர்களுக்கு இவர்கள் கூறுவது உண்மைபோலத் தோன்றும், நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் திருமாவுண்ணியின் கதைவேறு; கண்ணகியின் கதை வேறு என்பதும், இருவரும் வெவ்வேறு காலத்தில் இருந்த வெவ்வேறு பெண்மணிகள் என்பதும், இருவருக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லை என்பதும் தெளிவாகும்; பிள்ளையவர்களும் சாஸ்திரி அவர்களும் கருதுவது போல இவை கற்பனைக் கதைகள் அல்ல என்பதும், உண்மையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகள் என்பதும் நன்கு விளங்கும். கண்ணகி யின் வரலாறு வேறு, திருமாவுண்ணியின் வரலாறு வேறு. இரண்டு வேறுபட்ட வரலாறுகளை ஒரே வரலாறு என்று இணைத்துக் கூறுவது சற்றும் பொருந்தாது என்பதை இங்கு விளக்கிக் கூறுவோம். இதை, வேங்கை மரம், முலையறுத்தல் என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தனித் தனியே ஆராய்வோம்.